திருப்பாவை 8
Page 1 of 1
திருப்பாவை 8
கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகல முடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவா வென்றாராய்ந் தருளேலோ எம்பாவாய்
பொருள்..... கிழக்கிலே வானம் வெளுத்து விட்டது! எருமை மாடுகள் எல்லாம் பனி படர்ந்த சிறு புல்வெளியில் மேயத் தொடங்கிவிட்டன. பாவை நோன்பை முதற்கடமையாகக் கொண்டு கிளம்பிய மற்ற பெண்களையும் தடுத்து நிறுத்தி, உன்னையும் எங்களுடன் அழைத்துச் செல்ல உன் வீட்டு வாசலில் நின்று குரல் கொடுத்து அழைத்தவண்ணம் இருக்கிறோம். குதூகலம் நிறைந்த பெண்ணே!
ஹரி ஹரி என்ற நாமத்தைப் பாடிக் கொண்டே எழுந்திராய். குதிரை வடிவம் எடுத்து வந்த மாய அரக்கன் கேசியின் வாயைக் கிழித்து மாய்த்தவனும், கம்ஸன் ஏவிய மல்லர்களான சாணூரன், முஷ்டிகன் ஆகியோரை அழித்தவனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனுமாகிய நம் கண்ணனை நாம் வணங்கினால், நம்மைக் கண்டதும் ஆவென்று மனமிரங்கி, நம் குறைகளை ஆராய்ந்து அருள் புரிவான். எனவே பாவை நோன்பிருக்க விரைந்து வாராய் பெண்ணே!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum