திருப்பாவை 14
Page 1 of 1
திருப்பாவை 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்ன எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய்! நாணாதாய்! நா உடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!
பொருள்..... பெண்ணே உங்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்து குளத்தில் செங்கழுநீர் மலர்கள் பூத்துள்ளன. அல்லி மலர்க்ள் இதழ் மூடி கூம்பிக் காணப்படுகின்றன. காவி உடை அணிந்த வெண்ணிறமான பற்களை உடைய துறவிகள் கோவிலில் சங்கினை இசைப்பதற்காக சென்று விட்டனர்.
நாளை நீராடுவதற்காக எங்களை வந்து எழுப்புவேன் என்றுசொன்னாய். ஆனால் நீ சொன்னபடி செய்யவில்லை அதற்கான வெட்கமும் இல்லாமல் இருக்கிறாய். சங்கையும், சக்கரத்தையும் தன் கைகளில் ஏந்துபவன். தாமரை மலர் போன்ற அழகிய கண்களையும் உடைய கண்ணனை பாடுவதற்கு எழுந்தரு. எங்களுடைய அவன் புகழ் பாடவா.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum