திருப்பாவை 16
Page 1 of 1
திருப்பாவை 16
நாயகனாய் நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண
வாயிற்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்
பொருள்.... எங்கள் இறைவனாகிய நந்த கோபனுடைய கோவிலை காக்கின்ற காவலனே மணிகள் பதிக்கப்பட்ட கதவை திறப்பாயாக. ஆயர்குல சிறுமியர்களுக்கு அவர்கள் வேண்டுதலுக்கு இணங்க செல்வங்களை கொடுப்பதாக மாயக் கண்ணன் நேற்றே வாக்களித்து இருக்கிறான்.
அவனை தூக்கத்தில் இருந்து எழுப்ப நாங்கள் திருப்பள்ளி எழுச்சி பாட வந்தோம். இக்கதவை திறந்து விட்டால் நாங்கள் உள்ளே சென்று இறைவனை பாடி மகிழ்வோம். அதனால் மேன்மை பொருந்திய இக்கதவினை திறப்பாயாக!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum