தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பாவை - 2

Go down

திருப்பாவை - 2 Empty திருப்பாவை - 2

Post  meenu Thu Mar 28, 2013 4:22 pm

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையடா துயின்ற பரமன் அடிபாடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றுஒதோம்
ஐயமும பிச்சையும் ஆம்தனையும் கைக்காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

பொருள்......

இந்த பூமியில் பிறந்த வாழ்பவர்களே நாம் பாவை நோன்புக்காக செய்யக்கூடிய முறைகளை கேளுங்கள். திருப்பாற் கடலில் பாம்பு படுக்கையில் தூங்கி கொண்டு இருக்கம் பகவான் நாராயணனின் பாதங்களை வணங்கி பாட வேண்டும். நெய்யையும் பாலையும் உண்ணக் கூடாது. விடியற் காலையில் எழுந்து நீராடி கண்ணுக்கு மை தீட்டாமல் பூச்சூடி கொள்ளாமல் இருக்க வேண்டும். செய்யக்கூடாத செயல்களை செய்யக் கூடாது. எந்தநிலையில் பிறரை பற்றி குறை கூறாமல் இருக்க வேண்டும். பிறருக்கு தானம் வழங்கும் போது தானம் செய்கிறோம் என்ற செருக்கு இல்லாமல் அவர்கள் மன நிறைவு கொள்ளும் படி செய்தல் வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum