திருப்பாவை 18
Page 1 of 1
திருப்பாவை 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார்விரலி உன்மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்..... மதம் கொண்ட யானையை வைத்திருப்பவன் போர்களத்தில் எந்த நிலையிலும் பின் வாங்காத வலிமையான தோள்களை உடையவன் நந்த கோபாலன். அப்படிப்பட்டவனின் மருமகளே! நப்பின்னையே நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே! கதவை திறப்பாயாக! பொழுது புலர்ந்து விட்டது.
அதன் அடையாளமாக கோழிகளும், குயில்களும் கூவுகின்றன. அழகிய கை விரல்களை உடையவளே! உனது கணவன் கண்ணனின் புகழை நாங்கள் பாடுகிறோம். நீயும் கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலி எழுப்ப செந்தாமரை மலர் போன்ற சிவந்த கரங்களால் கதவை திறப்பாயாக!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum