தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிசம்பர் 13 முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா

Go down

டிசம்பர் 13 முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா Empty டிசம்பர் 13 முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா

Post  ishwarya Sat Mar 23, 2013 2:16 pm



சென்னை, டிச. 3: தமிழக அரசு மற்றும் திரைப்படத் துறையின் ஆதரவோடு இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள 10-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 13 முதல் 20-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.

இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் 2003-ம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள விழாவில் இடம்பெறும் படங்கள் உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, ஐநாக்ஸ், சத்யம், ராணி சீதை ஹால் மற்றும் கேசினோ திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.

இதில் 57 நாடுகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பங்கேற்கின்றன.

உலக சினிமா பிரிவில் கடந்த 12 மாதங்களில் வெளியான உலகின் மிகச் சிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த ஆண்டு கொலம்பியா, ஆஸ்திரேலியா, ஹங்கேரி மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது. பிரான்ஸ் இயக்குநர் கிளாடே சாப்ரோல் இயக்கிய படங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

தமிழ்ப் படங்கள் பிரிவில் "அரவான்', "ஆரோகணம்', "அட்டக்கத்தி', "மெரீனா', "மெüனகுரு', "முப்பொழுதும் உன் கற்பனைகள்', "நான் ஈ', "நீர்ப்பறவை', "பீட்சா', "சாட்டை', "சுந்தரபாண்டியன்', "வழக்கு எண் 18/9' ஆகிய 12 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "சந்திரலேகா' (தமிழ்), "மே சந்தோஷம்' (தெலுங்கு), "பதேர் பாஞ்சாலி' (பெங்காலி), "கைடு' (இந்தி), "வீப்பா' (கன்னடம்), "வதுகாரா அல்லது தம்பு' (மலையாளம்) ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.

இளம் கலைஞர்கள் திறமையை ஊக்குவிக்கும் வகையில் குறும்படங்களுக்கான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தமிழ் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்கும் ஒரு நாள் கருத்தரங்கம் 21-ம் தேதி நடைபெறுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த இயக்குநர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் தொடக்க விழா, ஏ.ஆர்.ரகுமான் இசைப்பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. நிறைவு விழாவில் நடிகர் அமிதாப் பச்சன் பங்கேற்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum