தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்ச்சையில் சர்வதேச திரைப்பட விழா

Go down

சர்ச்சையில் சர்வதேச திரைப்பட விழா Empty சர்ச்சையில் சர்வதேச திரைப்பட விழா

Post  ishwarya Tue Mar 05, 2013 2:22 pm

சென்ற வருடம் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடந்தபோது லீனா மணிமேகலையின் செங்கடல் படத்தை திரையிடவில்லை என படவிழா நடந்த போது ஆர்ப்பட்டம் நடத்தினர். இந்தமுறை ஆர்ப்பட்டம் இல்லையென்றாலும் பல‌ரின் ஆழ்மனதில் சில போராட்டங்கள் நடக்கதான் செய்கின்றன.

காரணம் ஆரண்யகாண்டம்.

தமிழ் சினிமாவின் அர்த்தமற்ற விதிகளுக்கு உள்படாமல் ஒரு புதுவெள்ளம்போல் திரைக்கு வந்த படம் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்யகாண்டம். இசை, மேக்கிங் என்று அனைத்தும் உலகத்தரத்தில் அமைந்த இந்தப் படத்தை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட‌‌த் தயார் என தயா‌ரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் தரப்பில் தெ‌ரிவித்தும் படத்தை திரையிட திரைப்பட விழாக்குழு அவரை அணுகவில்லை. இந்த வருடம் வெளியான படங்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என விழாக்குழு தரப்பில் தெ‌ரிவித்துள்ளதாக‌த் தெ‌ரிகிறது.

இந்த வருடம் 12 படங்கள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அரவான், நீர்ப்பறவை, நான் ஈ, ஆரோகணம், சாட்டை, சுந்தரபாண்டியன், மௌனகுரு, மெ‌ரினா, அட்டகத்தி, வழக்கு எண். இதில் நான் ஈ தெலுங்கு டப்பிங் படமாக இருந்தும் அதனை போட்டிக்கு எடுத்துக் கொண்டவிழாக்குழு ஆரண்யக்காண்டத்தை புறக்கணித்ததில் எந்த நியாயமும் இல்லை என்பதே நம் கருத்து.
சர்வதேச திரைப்பட விழா, ஆரண்யகாண்டம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum