தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

Go down

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா Empty சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

Post  ishwarya Sat Mar 23, 2013 5:29 pm



சென்னை, அக்.20: மூன்று நாள்கள் (அக்.20 முதல் 23 வரை) நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.

இண்டர்நேஷனல் தமிழ் பிலிம் அகாதெமியும், செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்த 8-வது சர்வதேசத் திரைப்பட விழாவை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது: இந்தத் திரைப்பட விழாவை தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் திரைப்படத் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் திரையுலகுக்கு பல நன்மைகளைச் செய்துள்ளார். ஒரு தயாரிப்பாளராக, படங்களைத் தயாரித்து பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் சினிமா ஆர்வலர்களுக்கு அவர் செய்து வரும் இந்த அரிய பணி பாராட்டுக்குரியது.

என்னுடைய முதல் படமான "ஆல்பம்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், நான் இதுபோன்ற சர்வதேசப் பட விழாக்களில் கலந்துகொண்டு உலக அளவில் சிறந்து விளங்கக் கூடிய ஏராளமான படங்களைப் பார்த்தேன். அதன் பிறகுதான் சினிமாவைப் பற்றிய என்னுடைய பார்வை மாறியது.

அதன் விளைவாகத்தான் தர ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற "வெயில்', "அங்காடித்தெரு' போன்ற படங்களை என்னால் தர முடிந்தது. சினிமாத்துறையில் உள்ளவர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள சர்வதேசத் திரைப்படங்களைப் பார்ப்பது அவசியம் என்றார்.

இந்த விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேசத் திரைப்பட ஒருங்கமைப்பாளர் குளோரியானா, நடிகை தன்ஷிகா, தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தியாகராய நகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி ப்ரிவியூ அரங்கில் இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது. சர்வதேச அளவில் பல விருதுகளையும் பரவலான பாராட்டுகளையும் பெற்ற திரைப்படங்கள் அக்டோபர் 22, 23-ம் தேதிகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை திரையிடப்படுகின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
» சர்ச்சையில் சர்வதேச திரைப்பட விழா
» சென்னையில் சர்வதேச பட விழா! 4 நாள் நடக்கிறது!!
» சென்னையில் உலக திரைப்பட விழா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum