நேர்மையும், திறமையும் இருந்தால் திரைப்படத் துறையில் ஜெயிக்கலாம்: நடிகர் பாண்டியராஜன் பேச்சு
Page 1 of 1

நேர்மையும், திறமையும் இருந்தால் திரைப்படத் துறையில் ஜெயிக்கலாம், என நடிகர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
நகைச்சுவை மன்றத்தின் 22-ம் ஆண்டு தொடக்க விழா, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடிகர் பாண்டியராஜன் பேசியதாவது:
திரைப்படத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல முன்னேற்றங்கள் நடந்துள்ளன. புதிதாக அறிமுகமாகியுள்ள 5டி கேமரா புதிய தலைமுறை கலைஞர்களுக்கு வரப்பிரசாதம். இந்த கேமராவை வைத்து, குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க முடியும். பட்ஜெட் குறைவாக இருந்தாலும், கற்பனை வளமும், கதைகள் நேர்த்தியாகவும் இருந்தால்தான் திரைப்படம் வெற்றிபெறும்.
திரைப்படத் துறையில் கலைஞர்களுக்கு நேர்மையும், தொழில் பக்தியும் அவசியம். திறமையுடன் நேர்மையான கலைஞர்கள் ஜெயிக்கலாம். சாதனையாளர்கள், மூத்த கலைஞர்களுக்கு வளரும் கலைஞர்கள் மரியாதை கொடுக்கவேண்டும்.
தங்களுக்கு தொழில் அத்துபடி என்பதுபோல், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. திரைப்படத் துறை ஒரு திறந்தவெளி மைதானம். கால்பந்தாட்ட வீரன் போல், அங்கும் இங்கும் ஓடினால்தான் கோல் போட்டு வெற்றிபெற முடியும்.
நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை மக்கள் கட்டித் தழுவி வரவேற்பார்கள். வர்த்தக ரீதியான திரைப்படங்களே வெற்றிபெறும் என்ற நிலை மாறி, நல்ல கதை, தரம் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைகின்றன என்றார்.
பின்னர், கலைந்துரையாடல் நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, நகைச்சுவை மன்றத் தலைவர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் தலைமை வகித்தார். சாதனையாளர்கள், வளரும் கலைஞருக்கான விருதுகளையும், மூத்த கலைஞர்களுக்கான விருதினையும் நடிகர் பிரிதிவிராஜன் வழங்கினார்.
தொழிலதிபர்கள் சுப்பிரமணியம், இளங்கோவன், கண்ணையா முருகேசன், அண்ணாமலை, சம்பத் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, சங்கையா, அழகுபாரதி குழுவினர் செய்திருந்தனர். கரிசல்பட்டி சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திரைப்பட தணிக்கைத் துறையில் வெளிப்படைத் தன்மை தேவை: நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேச்சு
» சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு
» தாழ்வு மனப்பான்மை கூடாது: நடிகர் சந்தானம் பேச்சு
» சுற்றுசூழல் சீர்கேட்டினால் மழை வளம் குறைந்துவிட்டது- நடிகர் விவேக் பேச்சு
» டுவிட்டரில் அவதூறு பேச்சு: விக்ரமிடம் நடிகர் ராணா மன்னிப்பு கேட்டார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum