சுற்றுசூழல் சீர்கேட்டினால் மழை வளம் குறைந்துவிட்டது- நடிகர் விவேக் பேச்சு
Page 1 of 1

நாலாட்டின்புதூர்,அக்.9-
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் கோவில்பட்டியில் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை தாங்கினார். கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜீ முன்னிலை வகித்தார்.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நினைவுபரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விவேக் மரக்கன்றுகளை வழங்கி பேசியதாவது:-
உலகவெப்பமயமான காரணத்தினால் தான் பருவ நிலை மாற்றம் அடைந்து மழை பொய்த்து வருகிறது.உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் தொழிற்சாலை,வாகனம் ஆகியவற்றில் இருந்து வெளி வரும் புகை, எலக்ட்ரானிக் பொருள்களில் இருந்து வரும் வெப்பம், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவைகள் தான்.
இந்த கழிவுகளால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்து பருவநிலை மாற்றமடைந்து வருகிறது. நமது இந்திய திருநாடு 80 சதவீத விவசாயிகளை கொண்டது. தற்போது மழை இல்லாத காரணத்தினால் அவர்களின் வாழ்வுநிலை கீழ்நிலைக்கு போய் உள்ளது.இதனை போக்க வேண்டும் என்றால் மரத்தினை நடுவது மட்டுமே தீர்வு.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் லெட்சுமணப்பெருமாள், மாவட்ட கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், நாகஜோதி குழுமம் தலைவர் காளிராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன் நன்றி கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மரத்தை வெட்டுவதால் மழை வளம் குறைந்தது: நடிகர் விவேக் ஆதங்கம்
» தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது, ஜெ. மீதான மரியாதை குறைந்துவிட்டது: நடிகர் கார்த்திக்
» ஆபாசப் பேச்சு: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட விவேக்!
» நடை, உடை, பேச்சு, செயல் என ரஜினியிடம் எல்லாமே “ஸ்டைல்”: குஷ்பு, விவேக், பாலசந்தர், ரவிக்குமார் பாராட்டு
» மீண்டும் ஏட்டு எரிமலையானார் நடிகர் விவேக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum