தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விழித்திரு படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கிருஷ்ணா

Go down

விழித்திரு படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கிருஷ்ணா Empty விழித்திரு படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கிருஷ்ணா

Post  ishwarya Fri Mar 22, 2013 2:30 pm



ஒரு நடிகனுக்கு என்ன ஆசை இருக்கும்? பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் அதிகமான படங்கள் நடிக்க வேண்டும் என்பதுதானே.

நடிகர் கிருஷ்ணாவின் இதுபோன்ற ஆசை தற்போது நிறைவேறி வருகிறது. ஆம். அவரது கையில் ஏராளமான படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன.

வானவராயன் வல்லவராயன் படத்திலும், விழித்திரு படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு பிசி நடிகரை சந்தித்து பேட்டி எடுக்கவில்லை என்றால் எப்படி என்று அவரை சந்திக்கச் சென்றோம்.

நாம் கேள்விகளை ஆரம்பிக்கும் முன்னரே அவரே பேசத் துவங்கிவிட்டார்.

விழித்திரு படத்துக்காக சுப்ரீம் சுந்தர் தலைமையில் ஆக்ஷன் காட்சிகளை படமெடுத்துக் கொண்டிருந்தோம். காமெராவை விஜய் மில்டன் கவனித்துக் கொண்டார். அப்போது மிக முக்கியமான ஆக்சன் காட்சியில் ஒருவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி என் தலையில் பயங்கரமாக இடித்தது. இடித்ததும் பயங்கர வலி. வீங்கியும் விட்டது. ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுநாள்தான் படப்பிடிப்புக்கே வர முடிந்தது என்றார் கிருஷ்ணா.

இப்படத்தின் இயக்குநர் பற்றி கேட்டதற்கு, இப்படத்தை மீரா கதிரவன் இயக்குகிறார். அவள் பெயர் தமிழரசி படத்தைத் தொடர்ந்து மீரா கதிரவன் இயக்கும் இரண்டாவது படம் இது. இதில், விதார்த், விமல் தவிர, வெங்கட் பிரபுவும் நடித்து வருகிறார். இப்படத்தில் எனக்கு ஜோடியாக அபினயாவும், முக்கிய வேடத்தில் தன்சிகாவும் இடம்பெற்றுள்ளனர். மேலும், சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபுவுடனான முக்கியக் காட்சிகளுக்குத் தான் தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

படப்பிடிப்பு நடக்கும் இடம் பற்றி கேட்டால்... நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

கடந்த 10 நாட்களாக சென்னையில் தான் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். அதுவும், அண்ணா நகர், அண்ணா சாலை மேம்பாலம் என மிக முக்கிய இடங்களில் தான் படப்பிடிப்பு நடக்கிறது என்றார்.

என்ன சென்னையிலா? நம் கண்ணில் ஒருநாளும் படவில்லையே என்றதற்கு, எப்படி பட முடியும், படப்பிடிப்பு முழுவதும் நள்ளிரவில் அல்லவா நடக்கிறது என்று கேட்டபடி கண் சிமிட்டுகிறார் கிருஷ்ணா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum