பெப்சிக்கு பிலிம் புரோமோட்டர்ஸ் சங்க நிர்வாகிகள் கோரிக்கை!
Page 1 of 1
பெப்சிக்கு பிலிம் புரோமோட்டர்ஸ் சங்க நிர்வாகிகள் கோரிக்கை!
தென்னிந்திய பிலிம் புரோமோட்டர்ஸ் (மீடியேட்டர்ஸ்) அசோஷியேசனின் தேர்தல் மார்ச் 3-ம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இதில் புதிய சங்க நிர்வாகிகள் மற்றும் 16 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே மீடியேட்டர்களாக இருந்து திரைப்படங்களை வியாபாரம் செய்துகொடுப்பது அதே சமயத்தில் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே மீடியேட்டர்களாக இருந்து திரைப்பட வியாபாரங்களை கவனித்து கொள்பவர்களை சினிமா மீடியேட்டர்கள் என்று அழைப்பார்கள். இந்த பணியை செய்யும் ஏராளமானவர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த சங்கம் நாற்பது ஆண்டுகளாக இயங்கி வந்தாலும், இந்த ஆண்டுதான் இச்சங்கத்திற்கு தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 3-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இச்சங்கத்தின் தேர்தலில் தலைவராக பி.எல்.நாகப்பன், இணை செயலாளராக ஜி.சேகர் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கணபதி 169 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். துணை தலைவராக துசைச்சாரி, 189 வாக்குகளும், பொருளாளராக எஸ்.கே.குமார் 199 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றார்கள். இவர்களுடன் 16 செயற்குழு உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். 375 பேர் உறுப்பினர்களாக இருக்கும் இச்சங்கத்தின் தலைவர் பி.எல்.நாகப்பன், பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, "மீடியேட்டர்கள் சங்கம் தற்போது பெப்சியுடன் இணையாமல் இருக்கிறது. சினிமா துறையில் மற்ற தொழிலாளருக்கு ஊதியம் என்பது நிரந்தமாக இருக்கிறது. ஆனால் எங்களைப் பொருத்தவரையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இருவரிடம் இருந்து வரும் கமிஷன்தான் சம்பளம். நிரந்தரமான் ஊதியம் என்பது எங்களுக்கு கிடையாது. நாங்கள் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் எங்கள் சங்கத்தையும் பெப்சியுடன் இணைத்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கப்போகிறோம். இதை அவர்கள் ஏற்க மறுத்தால் நாங்கள் தமிழக முதல்வரிடம் எங்கள் கோரிக்கையை கொண்டு செல்வோம்." என்றார். ஏற்கனவே போற ரயிலுக்கே தண்டவாளத் தகராறாம்.... இதுல இன்னோரு பெட்டி வேறயா....?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
» இன்று பெப்ஸி நிர்வாகிகள் தேர்தல்
» ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் உலகம்
» கருப்பு பிலிம் ஒட்டிய காரில் பயணம்: டைரக்டர் விஜய்க்கு அபராதம்
» விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு ரஜினிகாந்த் கோரிக்கை
» இன்று பெப்ஸி நிர்வாகிகள் தேர்தல்
» ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் உலகம்
» கருப்பு பிலிம் ஒட்டிய காரில் பயணம்: டைரக்டர் விஜய்க்கு அபராதம்
» விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு ரஜினிகாந்த் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum