தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று பெப்ஸி நிர்வாகிகள் தேர்தல்

Go down

இன்று பெப்ஸி நிர்வாகிகள் தேர்தல் Empty இன்று பெப்ஸி நிர்வாகிகள் தேர்தல்

Post  ishwarya Mon Mar 25, 2013 4:37 pm



சென்னை, ஜூன் 19: தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துக்கான (பெப்ஸி) நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் செவ்வாய்க்கிழமை இன்று நடைபெறுகிறது.

பெப்ஸிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், பொதுச் செயலாளர் உள்பட 13 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு தொழிலாளர் அமைப்புக்கு மூன்று வாக்குகள் வீதம் பெப்ஸியில் உள்ள 22 அமைப்புகளுக்கு மொத்தம் 66 வாக்குகள் உள்ளன.

அதன்படி 2012-2014 க்கான நிர்வாகிகளின் தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள பெப்ஸி அலுவலகத்தில் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. சண்டைப் பயிற்சியாளர் சங்க முன்னாள் நிர்வாகி நாராயணன் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.

பெப்ஸி தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் அமீர், விசு ஆகியோரும், பொதுச் செயலாளர் பதவிக்கு சிவா, உமாசங்கர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு அங்கமுத்து சண்முகம் ஏற்கெனவே ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐந்து பொதுச் செயலாளர்கள், ஐந்து துணைத் தலைவர்கள் பொறுப்புக்கு மேலும் பலர் போட்டியிடுகிறார்கள்.

இன்று இரவு 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்
» இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை தேர்தல்: விளையாட்டு துறை அமைச்சில் இன்று
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» பெப்ஸி சம்பளப் பிரச்னைக்கு உடனடி தீர்வு
» தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum