தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு ரஜினிகாந்த் கோரிக்கை

Go down

விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு ரஜினிகாந்த் கோரிக்கை Empty விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு ரஜினிகாந்த் கோரிக்கை

Post  ishwarya Sat Mar 23, 2013 12:23 pm



கமலின் விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு இஸ்லாமிய சமூகத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

விஸ்வரூபம் திரைப்படத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தை வெளியிட 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. சுமார் 95 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த த்ரில்லர் படம் இன்று உலகமெங்கும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசின் தடையால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கமலுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ள ரஜினிகாந்த், இஸ்லாமிய சகோதரர்கள், விஸ்வரூபம் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி படம் வெளியாக உதவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். கமலுடன் பேசி, கதையில் எந்த பாதிப்பும் வராமல், காட்சிகளை எவ்வாறு மாற்றலாம் என்று ஆலோசியுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய சமூக தலைவர்கள் வெளியீட்டுக்கு முன்பாக பார்க்க கமல் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அதனை இஸ்லாமியர்கள் மறுத்துவிட்டனர். இந்த வாய்ப்பு, கமல், இஸ்லாமியர்கள் மீதான மரியாதையை வெளிப்படுத்துவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேவி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் முற்றுகை வேலாயுதம் படத்தை திரையிட கோரிக்கை
» விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்ட தமிழக அரசு தடை ரத்து
» விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் திரையிட விடமாட்டோம்! தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு!!
» விஸ்வரூபம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் போட்டி: சென்னையில் 30 திரையரங்கில் ரிலீஸ்
» விஸ்வரூபம் படத்தை தடுக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum