தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரள காடையரால் தமிழ் பெண்கள் மானபங்கம்: பாதிக்கப்பட்ட சகோதரிகளின் வாக்குமூலத்துடன்

Go down

கேரள காடையரால் தமிழ் பெண்கள் மானபங்கம்: பாதிக்கப்பட்ட சகோதரிகளின் வாக்குமூலத்துடன் Empty கேரள காடையரால் தமிழ் பெண்கள் மானபங்கம்: பாதிக்கப்பட்ட சகோதரிகளின் வாக்குமூலத்துடன்

Post  meenu Sat Mar 16, 2013 1:55 pm

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில
மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம்
சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும்
கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும்
பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி
இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி
வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும்.
குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை
செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில்
இருந்து சென்று வருபவர்கள்.

அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள்,
மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில்,
கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த
கேரளத்தைச் சேர்ந்த ‘போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன்,
தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

”அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு,
மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா… உங்க
சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு
கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா… இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு
எங்க மேலேயே…”


என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.

”எங்களை வரிசையா நிப்பாட்டி… ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச்
சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்… பான்பராக்,
வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. ‘இது, உங்க பொம்பள சி.எம். மேல
துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க
சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல… என்னால சொல்ல முடியலையே சாமீ”


என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது.
அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத்
தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.

”அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா”

என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.

”சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு
எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள்
பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப்
பெரிய கொடுமை… நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம்
பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை”


என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின்
பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி
பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது.
கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ”அய்யா…
எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க” என்று
துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள்.

பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின்
பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப்
ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை
ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள்
வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு
கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).

அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில்
தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக்
போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி.
பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு
இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும்
மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள்
தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும்
கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார்.

வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை
போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும்
ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு
ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர்
திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும்
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன…..!!!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நீதிபதியே சில்மிஷத்தில் ஈடுபட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிக்கு எங்கு செல்வார்கள்..!
»  புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் செயற்கை கருப்பையால் குழந்தை பெறலாம்
» மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!
» மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!
» சிங்கள ராணுவத்தில் 95 தமிழ் பெண்கள் சேர்ந்தனர்: கிளிநொச்சி ராணுவ தலைமையகத்தில் விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum