சிங்கள ராணுவத்தில் 95 தமிழ் பெண்கள் சேர்ந்தனர்: கிளிநொச்சி ராணுவ தலைமையகத்தில் விழா
Page 1 of 1

சிங்கள ராணுவத்தில் 95 தமிழ் பெண்கள் சேர்ந்தனர். அவர்கள் 4 மாத கால ராணுவ பயிற்சியை முடித்தனர்.
தமிழ் பெண்கள்
இலங்கை ராணுவத்தின் 63 ஆண்டு கால வரலாற்றில் தமிழ் பெண் அதிகாரிகள் கணிசமானோர் ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர். ஆனால், முதன்முறையாக தமிழ் பெண்கள் அதிக அளவில் சிப்பாய்களாக சேரும் நிகழ்ச்சி, தற்போது நடந்துள்ளது. 95 தமிழ் பெண்கள் அடங்கிய ஒரு பேட்ச், 4 மாத கால பயிற்சியை முடித்து வெளியேறி உள்ளது.
அணிவகுப்பு
இவர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு, விடுதலைப்புலிகளின் தலைநகராக முன்பு கருதப்பட்ட கிளிநொச்சியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பு, பிரிகேடியர் ஆ.ரத்னசிங்கம் தலைமையில் நடைபெற்றது. மேஜர் ஜெனரல் உதய பெரேராவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினருக்கு தமிழ் பெண் சிப்பாய்கள் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
விரைவில் பணி
பயிற்சி காலத்தில் அவர்கள் காட்டிய திறமையின் அடிப்படையில் அவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. 44 பெண் சிப்பாய்களுக்கு ஸ்கூட்டர் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ் பெண் சிப்பாய்களின் பெற்றோரும், உறவினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்தவுடன், அவர்களுக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது. இந்த தமிழ் பெண் சிப்பாய்கள், வடக்கு பகுதியில் சிவில் விவகார ஒருங்கிணைப்பாளர்களாகவும், குமாஸ்தாவாகவும் விரைவில் பணி அமர்த்தப்படுவார்கள்.
4 மாத கால பயிற்சி
இந்த பெண் சிப்பாய்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் கிளிநொச்சியில் பாரதிபுரம் ராணுவ பயிற்சி பள்ளியில் 4 மாத கால பயிற்சி பெற்றனர். பயிற்சியின்போது, கம்ப்யூட்டர் பயிற்சி, சிங்கள, ஆங்கில மொழி பயிற்சி, மக்கள்–ராணுவ உறவுகள் குறித்த பயிற்சி, நல்லிணக்க பயிற்சி ஆகிய பயிற்சிகளும் பெற்றனர். இலங்கை ராணுவம், ‘சிங்கள ராணுவம்’ என்று சர்வதேச விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. அதை மாற்றி, பல்வேறு இனத்தினரும் ராணுவத்தில் பணிபுரிகிறார்கள் என்பதை காட்டுவதற்காக, தமிழ் பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோயில்களில் தமிழ் புத்தாண்டு விழா
» ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
» தமிழ் சிங்கள மக்களின் கலை கலாச்சாரங்கள் மிக நெருக்கமானவையாம். கூறுகின்றார் விமல் வீரவன்ச
» சிங்கள பௌத்தர்களைக் காப்பாற்றுதற்கு பொது பல சேனாவும் சிங்கள ராவயும் களம் குதிக்கிறது.... !
» பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum