தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகையாக நடிப்பது சுலபம்

Go down

நடிகையாக நடிப்பது சுலபம்  Empty நடிகையாக நடிப்பது சுலபம்

Post  ishwarya Thu Mar 14, 2013 2:02 pm

சென்னை : மெட்ரோ பிலிம்ஸ் சார்பில் விஸ்வநாதன் தயாரிக்கும் படம், ‘புதுமுகங்கள் தேவை’. சிவாஜிதேவ், ராஜேஷ் யாதவ், ஆதேஷ், பானு நடிக்கிறார்கள். மனீஷ்பாபு இயக்குகிறார். படம் நாளை ரிலீஸ் ஆகிறது. படத்தில் நடித்துள்ள பானு கூறியதாவது: தமிழில் சிறிய இடைவெளிக்குப் பிறகு நான் நடித்துள்ள படம் இது. இதில் நடிகையாக நடிக்கிறேன். ஒரு தயாரிப்பாளருடன் இணைந்து புதியவர்கள் இயக்கும் படத்தில் முன்னணி நடிகையாக நான் நடிப்பது மாதிரி கதை. கதைப்படி நான் தயாரிப்பாளரையும் இயக்குனரையும் டார்ச்சர் கொடுப்பவராக நடித்திருந்தாலும் நிஜத்தில் அப்படி இல்லை.

இந்தப் படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அனுபவம், நடிகையாக நடிப்பது சுலபம் என்பதுதான். என்னுடைய பாடிலாங்குவேஜ், ஸ்டைல், மேனரிசத்தை அப்படியே செய்திருக்கிறேன். இது காமெடி படம். சினிமாவுக்கு புதிதாக வருகிறவர்கள் எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதை சிரிக்க வைத்தே சொல்லும் படம். என் கேரியரில் முக்கியமான படமாக இது இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum