தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறந்த நடிகையாக நயன்தாரா!

Go down

சிறந்த நடிகையாக நயன்தாரா!  Empty சிறந்த நடிகையாக நயன்தாரா!

Post  ishwarya Tue Mar 19, 2013 1:38 pm

தமிழகம் முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் 12 சதவிகிதம் பேர் வசித்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் பல தெலுங்கு மக்கள் நலச்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னையில் இயங்கி வரும் சங்கங்களில் ஸ்ரீ கல சுதா அசோசியேசன்ஸ் சற்று பெரிய சங்கம் என்று சொல்லலாம். இந்த சங்கம் 14-வது ஆண்டாக யுகாதி தெலுங்கு புத்தாண்டை சென்னையில் விமர்சையாக கொண்டாட இருக்கிறது. மேலும் சிறந்த தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்குவதையும் வழக்கமாக வைத்திருகிறது. மேலும் சினிமா அல்லாத 'மஹிலா ரத்னா' என்ற விருது பிரபலமான விருதையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் யுகாதி புரஸ்கார் விருதுகள் என்ற தலைப்பில் தெலுங்கு சினிமாவுக்கு இறுதி செய்யப்பட்ட விருதுகளின் பட்டியலை இன்று சென்னையில் அறிவித்தது. சிறந்த நடிகருக்கான விருது 'ஸ்ரீராமராஜ்யம்' படத்திற்காக ராமகிருஷ்ணாவுக்கும் சிறந்த நடிகைக்கான விருது 'ஸ்ரீராமராஜ்யம்' படத்திற்காக நயன்தாராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற முக்கிய விருதுகளில் சிறந்த இயக்குநர்-பப்பு (ஸ்ரீராமராஜ்யம்), சிறந்த படம்-ஸ்ரீராமராஜ்யம், இசையமைப்பாளர்-இளையராஜா (ஸ்ரீராமராஜ்யம்), பின்னணி பாடகர்-எஸ்.பி.பாலசுப்ரமணியம் (ஸ்ரீராமராஜ்யம்), பின்னணி பாடகி-மாளவிகா, ஒளிப்பதிவு -பி.ஆர்.கே.ராஜு (ஸ்ரீராமராஜ்யம்), வசனம்-மறைந்த முல்லபுடி வெங்கட்ராமன் (ஸ்ரீராமராஜ்யம்), வில்லன்-பிரகாஷ்ராஜ் (உசர்வேலி), காமெடியன்-அலி, குழந்தை நட்சத்திரம்-பேபி யானி (ராஜன்னா), கதை-விஜயேந்திர பிரசாத் (ராஜன்னா), திரைக்கதை-பரசுராம்(சோலோ), பாடல்கள்-சிவசக்தி தத்தா (ராஜன்னா), நடுவர் சிறப்பு விருது ஆண்-நாகசைதன்யா (100% லவ்), நடுவர் சிறப்பு விருது பெண்-தமன்னா (100% லவ்), நடுவர் சிறப்பு விருது இசையமைப்பாளர்-தமன், சிறந்த அறிமுக நடிகர்-ஆதி (பிரேம காவாலி), சிறந்த அறிமுக நடிகை-ஸ்ருதி ஹாசன் (ஓ மை பிரண்ட்) ஆகியோர் அடங்குகிறார்கள். சினிமா அல்லாத மஹிலா ரத்னா விருது பெருபவர்களின் பட்டியலில் டாக்டர். அஞ்சலிதேவி (நடிகை), அக்கம்மா கிருஷ்ணமூர்த்தி (சமூக சேவை), பி.வசந்தா (பழம் பெரும் பின்னணி பாடகி), அனிதா குஹா (பரதநாட்டிய குரு)ஆகியோர் அடங்குகிறார்கள். மார்ச் 23-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை, மியூசிக் அகடமியில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்துகொள்கிறார். மேலும் பல தெலுங்கு பிரபலங்களும் இந்த நிகழ்சியில் கலந்துகொள்கிறார்கள் என்று தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கிறது சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இந்த சங்கம்! சீதாவுக்கு மட்டுமல்ல... நெசத்துலயும் நீங்க நல்ல நடிகைதான்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» லாஸ் ஏஞ்சல்சில் கோலாகல விழா: “ஹுகோ ” படத்துக்கு 5 ஆஸ்கார் விருது: சிறந்த துணை நடிகையாக அக்டாவியா ஸ்பென்சர் தேர்வு
» ‘சிறந்த ஜோடி நயன்தாரா – பிரபு தேவா’ – கேலிக்கூத்தான ஒரு விருது!
» நயன்தாரா, திரிஷா, தமன்னாவுக்கு சிறந்த நடிகைகளுக்கான ‘சந்தோஷம்’ விருது
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» நடிகையாக நிரூபித்திருக்கிறேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum