தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நம்பர் 1 நடிகையாக பயிற்சி எடுக்கிறார் அமலாபால்

Go down

நம்பர் 1 நடிகையாக பயிற்சி எடுக்கிறார் அமலாபால் Empty நம்பர் 1 நடிகையாக பயிற்சி எடுக்கிறார் அமலாபால்

Post  ishwarya Mon Apr 01, 2013 12:33 pm

மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த ரன் பேபி ரன் வெற்றிக்குப் பிறகு அமலாபால் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் ஜோடி போடுகிறார். இப்போதுள்ள இளம் நடிகைகளில் எதையும் திட்டமிட்டு சரியாக செய்கிறவர் என்ற பெயர் அமலாபாலுக்கு உண்டு. அவரது டிரஸ்சிங் சென்ஸ் பற்றி மற்ற நடிகைகள் அரண்டு போயிருக்கிறார்கள். தமிழில் எப்படியாவது நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

அனுஷ்கா தெலுங்கில் அக்கறை காட்டி வருகிறார், நயன்தாராவுக்கு தமிழ் படங்களில் ஆர்வம் இல்லை. காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் இந்தி படங்களின் பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். த்ரிஷா கல்யாண மூடில் இருக்கிறார். ஆக தமிழில் நம்பர் ஒன் நடிகை என்ற இப்போதைக்கு யாரையும் குறிப்பிட முடியாது அந்த இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்கத்தான் அமலாபால் முயற்சி செய்து இருக்கிறார். இப்போது அவருக்கு இருக்கும் ஒரே போட்டியாளர் ஹன்சிகா மட்டுமே அவருக்கு வடக்கத்திய முகசாயல் இருப்பதால் எல்லா கேரக்டருக்கும் அவர் பொருந்த மாட்டார். ஆனால் அமலாபாலுக்கு உள்ளூர் முகம், கவர்ச்சி, நடிப்பு என எல்லாமே இருப்பதால் எளிதில் நம்பர் 1 இடத்தை பிடித்து விடுவார் என்று சொல்கிறார்கள்.

நடனத் திறமையை மெருகேற்ற தனியாக ஒரு மாஸ்டரை நியமித்து கற்று வருகிறார். மேக்அப் மேன், டயட்டீசியன், பேஷன் டிசைனர், தமிழ் வாத்தியார் என தனி டீமே அமலா பாலுவுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் விஜய் இயக்க இருக்கும் புது படத்தில் அமலாபால்தான் ஹீரோயின் என்று இப்போதே பேச்சு இருக்கிறது. எல்லாவற்றையும் விட யாரிடம் எப்படி பழக வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார் அமலாபால்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum