விஐபி பூஜையறை : நடிகர் அருண்விஜய்
Page 1 of 1
விஐபி பூஜையறை : நடிகர் அருண்விஜய்
பக்தியை உணர்வது ஒன்று; அனுபவிப்பது ஒன்று. நடிகர் அருண்விஜய், இரண்டாம் பிரிவினர். முருகன் மீது கொண்ட பக்தி அவரது உள்ளத்திலும் உதடுகளிலும் மட்டுமன்றி, அவர் முதுகிலும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. ஆமாம், முருகனின் வேல் அவர் முதுகில் பச்சை குத்தப்பட்டிருக்கிறது.
அவர் மேலும் சொல்கிறார்: ‘‘என் பூஜையறையில் பிரதானமாக விநாயகர், பாணலிங்கம், தாயார்-திருப்பதி பெருமாள் மற்றும் என் தாயார் வழிபடும் பரம்பரை பாரம்பரியம் மிக்க எல்லா தெய்வங்களும் வீற்றிருக்காங்க. என் குலதெய்வம், பட்டுக்கோட்டை நாட்டுச்சாலையில இருக்கற பச்சையம்மன். சுயம்புவா அம்மன் கொலுவிருக்கும் இந்த ஆலயத்தில் எங்கள் குடும்பத்தார், பிற சிலைகளை வைத்து கோயிலை முழுமையாக்கியிருக்கிறோம்.
அந்த கோயிலுக்கு பூசாரி இல்லை; பொதுமக்களே பூஜை செய்யலாம். நான் எப்ப ஊருக்கு போனாலும் அந்த அம்மனுக்கு என் கையாலேயே அபிஷேகம் செய்து வழிபடுவேன். அந்த ஊர் ஆற்றங்கரையில இருக்கற சடையன்சாமியையும் கும்பிடுவேன். என் மனைவி ஆழ்ந்த முருக பக்தை. அதனால் முரு கனும் என்னோட இஷ்டதெய்வமாகிட்டார். முருகன் மேல் பக்தி ஏற்பட்ட பின்னர், ‘மல, மல’, ‘தடையறத் தாக்க’ போன்ற திரைப்படங்கள் அமைந்த தும் அதன் முதல் படப்பிடிப்பு பழநி மலையில் அமைந்ததும் முருகன் திருவருள்தான். என் குடும்ப நண்பர் விஜயகுமாரி தந்த வேலை பூஜையறை யில் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாக்கறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த வேலை எடுத்து அபிஷேகம் செய்வதே முதல் வேலை. நமக்கு மேலே ஒரு சக்தி நிச்சயமா இருப்பதை அவரவர் அனுபவத்தாலதான் உணர முடியும். இதைப் புரிந்துகொண்டாலேயே அப்படி ஒரு சக்தி இல்லை என்று வாதிடுபவர்களுடன் எதிர்வாதம் செய்ய வேண்டியிருக்காது.
சபரிமலைக்கு விரதமிருந்து என் சகோதரியின் கணவருடன் சென்றிருந்தேன். எக்கச்சக்க கூட்டம். அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அவரும் நானும் 18 படிகளை நெருங்கியபோது, நெரிசலைத் தவிர்ப்பதற்காக எல்லா பக்தர்களையும் அப்படியே நிறுத்திவிட்டார்கள். நாங்கள் யோசித்தபடி நின்றிருந்த போது திடீரென சகோதரியின் கணவருக்கு மூச்சு முட்டியது. திணறினார் அவர். ‘ஐயப்பா, காப்பாற்று...’ என்று கண்களில் நீர்மல்க வேண்டிக்கொண் டேன். உடனே படியேற அனுமதிக்கப்பட்டபோது பக்தர் அலை அப்படியே மேலேறியது. இந்தக் குழப்பத்தில் நான் அவரைத் தவற விட்டுவிட்டேன். என் முயற்சியில்லாமல், கூட்டத்தின் உந்துதலால் நான் சந்நிதானம் முன் வந்து நின்றேன்.
பதினெட்டுப் படி ஏறும்வரை என் கண்களிலேயே படாத சகோதரியின் கணவர், அங்கே என் அருகே நின்றுகொண்டிருந்தார்! எந்த உபாதையும் இல்லாமல் மலர்ச் சிரிப்புடன் காணப்பட்டார் அவர்! ‘யாரோ ஒருத்தர் என் கையைப் பிடித்து மேலே இழுத்துக்கொண்டு போனதுபோல இருந்தது. கடைசியில் நான் உன்னருகே நிற்கிறேன். என்னைப் பிடித்து இழுத்தவர் யார்?’ என்று அவர் கேட்டபோது, ஐயப்பனின் அருள்தான் அது என்று எனக்குப் புரிந்தது. நம் கடமையை ஒழுங்காக செய்தால் இறைவன் கூடவே இருப்பான் என்பது என் உறுதியான நம்பிக்கை. ஊனமில்லாத பிறவியைத் தந்ததற்கு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தை, நல்ல நண்பர் என்று அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுவதே என் தினசரி பூஜையில் முக்கிய பகுதி.’’

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஐபி பூஜையறை : நடிகர் ராஜ்கிரண்
» விஐபி பூஜையறை : நடிகர் காத்தாடி ராமமூர்த்தி
» விஐபி பூஜையறை : நடிகர் பொள்ளாச்சி பாபு
» விஐபி பூஜையறை : சித்ரவீணை ரவிகிரண்
» விஐபி பூஜையறை : இயக்குநர் ஸெல்வன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum