விஐபி பூஜையறை : நடிகர் காத்தாடி ராமமூர்த்தி
Page 1 of 1
விஐபி பூஜையறை : நடிகர் காத்தாடி ராமமூர்த்தி
விஐபி பூஜையறை : நடிகர் காத்தாடி ராமமூர்த்தி
கருத்துகள்
10:44:15
Saturday
2012-12-01
'' Drama in the sky above my famous kite to fly above, that my efforts Lotta (wood work) Departure from lankupavar vinayakartan'' s book, Genesis, God speaks of the emotions of devotion, faith, Ramamurthy kite. Stage plays, films, television series cirakatittu flying in the sky and he was still popular. '' When it human effort failed, giving the impression of a resourceful goddess perarultan marrikkattum defeat into victory. An example: Handloom exhibition in Chennai once in the past the post 'in play.
What fixed deposits are?
You need to upgrade your Adobe Flash Player to watch this video.
Get Adobe Flash player
MORE VIDEOS
‘‘நாடக வானில் என் புகழ் காத்தாடி மேலே மேலே பறந்து செல்ல, என் முயற்சிகள் என்ற லோட்டா (நூல் கட்டை)விலிருந்து புறப்படும் நூலாக வி ளங்குபவர் விநாயகர்தான்’’, ஆதி கடவுள் மீதான பக்தி நம்பிக்கையில் உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிறார், காத்தாடி ராமமூர்த்தி. மேடை நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்று இன்னமும் புகழ் வானில் சிறகடித்துப் பறக்கிறார் இவர். ‘‘மனித முயற்சிகளுக்கு தோல்வி ஏற்படும்போதும் தெய்வம் கைவிட்டுவிடுவதில்லை; ஏதேனும் ஒரு சமயோசித எண்ணத்தைத் தந்து அந்தத் தோல்வியை வெற்றியாக மாற்றிக்காட்டும் பேரருள்தான் தெய்வம். ஒரு உதாரணம்: ஒருமுறை சென்னையில் கைத்தறிக் கண்காட்சியில் ‘படி தாண்டிய பதி’ நாடகம் நடைபெற்றது.
அதில் நடித்த ஒரு நடிகை சினிமாவிலும் பிஸியாக இருந்தார். என் நாடகத்தை முடித்துவிட்டு, மறுநாள் படப்பிடிப்புக்கு வேறு ஊருக்கு போகவேண்டும். அன்றைய நாடகத்திற்குத் தலைமையேற்ற ஒரு அமைச்சர், கடிகாரம் பார்க்காமல் பேசிக்கொண்டே இருந்தார். நடிகைக்கு ரயிலுக்கு நேரமாகிவிட்டது. வேறு வழியில்லாமல் விநாயகர் மேல் பாரத்தைப் போட்டு விட்டு அவரைப் போகச்சொல்லிவிட்டேன். லக்ஷ்மியம்மா என்ற அந்த கதாபாத்திரத்தை லக்ஷ்மிபதி என்று மாற்றச் சொன்னேன். நாடகம் போய்க்கொண்டிருந்தபோது பழக்க தோஷத்தில் பிற கேரக்டர்கள் எல்லோ ருமே ‘மேடம்’ என்று புது கேரக்டரைக் கூப்பிட்டுவிட்டு உடனே, ‘சார்’ என்று மாற்றிக்கொண்டார்கள்.
உள்விவகாரம் தெரியாத ரசிகர்கள் அதை காமெடி என்று எண்ணி சிரித்து ரசித்தபோது, அரங்கில் விநாயகரும் ஒரு ரசிகராக அமர்ந்து ரசித்தது போன்ற பிரமை!
பிள்ளையார்தான் என் இஷ்டதெய்வம். வீடெங்கிலும் வித விதமான பிள்ளையாரைப் பார்க்கலாம். என் குல தெய்வம், முடிகொண்டான் அருகே இ ருக்கும் செருவளூர் தென்குடி மாரியம்மன். ஆற்றைக் கடந்துதான் அந்த அம்மனை தரிசிக்க முடியும்; அப்படி பலமுறை நான் தரிசித்திருக்கிறேன். இப் போதும் தமிழ் வருடப் பிறப்பன்று அந்த அம்மனுக்கு காணிக்கை அனுப்பி அபிஷேக, ஆராதனைகள் செய்து வருகிறேன். எப்போது புது நாடகம் ஆரம்பித்தாலும், மயிலாப்பூர் கற்பகாம்பாள் பாதத்தில் அந்த நாடக ஸ்க்ரிப்ட்டை வைத்து பூஜித்து விட்டுத்தான் ஆரம்பிப்பேன்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஐபி பூஜையறை : நடிகர் ராஜ்கிரண்
» விஐபி பூஜையறை : நடிகர் அருண்விஜய்
» விஐபி பூஜையறை : நடிகர் பொள்ளாச்சி பாபு
» விஐபி பூஜையறை : அபஸ்வரம் ராம்ஜி
» விஐபி பூஜையறை : டாக்டர் விஜய்சங்கர்
» விஐபி பூஜையறை : நடிகர் அருண்விஜய்
» விஐபி பூஜையறை : நடிகர் பொள்ளாச்சி பாபு
» விஐபி பூஜையறை : அபஸ்வரம் ராம்ஜி
» விஐபி பூஜையறை : டாக்டர் விஜய்சங்கர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum