தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஐபி பூஜையறை : கொன்னக்கோல் வி.வி.எஸ்.மணியன்

Go down

விஐபி பூஜையறை : கொன்னக்கோல் வி.வி.எஸ்.மணியன்  Empty விஐபி பூஜையறை : கொன்னக்கோல் வி.வி.எஸ்.மணியன்

Post  meenu Thu Mar 07, 2013 6:11 pm

‘சந்திரமுகி’ திரைப்படத்தின் ‘ரா, ரா...’ பாடல் என்றும் நிலைத்திருக்கக்கூடியது. இந்த வெற்றிக்கு ‘தாம் தரிகிட தீம்...’ என்ற கொன்னக்கோல் ஒலி ஒரு முக்கிய காரணம். இதைப் பாடியவர் வி.வி.எஸ்.மணியன். கொன்னக்கோல் என்பதை வாய்த்தாளம் என்றும் சொல்லலாம். ரிதம், பீட் எனப்படும் தாள உத்தியின் குரல்-ஒலி வடிவம். கஞ்சிரா, மிருதங்கம், தவில் போன்ற தாள வாத்தியக் கருவிகளை இசைப்பதில் வல்லவரான இவர், வாய்தாளத்தி லும் இடி முழக்கம்போல, விண்புகழ் ஈட்டி வருகிறார்.

‘‘என் இஷ்டதெய்வம், குலதெய்வம் எல்லாமே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்தான். என் முதல் பெண் திருமணத்தின்போது மிகுந்த பணமுடை ஏற்பட் டது. சிறுவாச்சூர் மதுரகாளியை மனமுருகி தரிசித்து விட்டு வந்தேன். என் நலம் விரும்பி ஒருவர் தானே என் வீடு தேடிவந்து நகைகள், வெள்ளி பாத் திரங்கள், சீர்பொருட்கள் போன்றவற்றை மனமுவந்து வாங்கித் தந்து ஆசிர்வதித்தார். கண்களில் நீர் மல்க, அந்த கருணையில் நான் மதுரகாளியைக் கண்டேன். ஒரு திருமண நிகழ்ச்சியில் நித்யஸ்ரீ கச்சேரியில் அவர் பாடலுக்கு நான் கொன்னக்கோல் சொன்னேன்; நிகழ்ச்சிக்கு வந்திருந்த இசையமைப் பாளர் வித்யாசாகர் அதைக் கேட்டு எனக்கு ‘சந்திரமுகி’ படத்தில் பாட வாய்ப்புத் தந்தார். இதுவும் மதுரகாளியின் அருளே.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மதுரகாளியைப் போய் தரிசித்து மாவிளக்கு போட்டுவிட்டு வருவேன். எனக்குப் பரிசாகக் கிடைத்த காணிப்பாக்கம் பிள் ளையார் படம், ஷீரடிபாபா விக்கிரகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி படம், மகாபெரியவர் படம், ராகவேந்திரர் படம் ஆகியவை என் பூஜையறை பொக்கிஷங்கள். ராகவேந்திரர் படம் வந்தவுடனே என் இரண்டாவது பெண்ணிற்கு திருமணம் நிச்சயமானது, இன்றும் உள்ளம் சிலிர்க்கும் உண்மை. கர்நாடக மாநிலம் சுப்ரமண்யாவில், கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அளித்த நூறு ரூபாயை ஃப்ரேம் போட்டு பூஜையறையில் வைத்திருக்கிறேன்.

அதே போல காஞ்சிபுரம் மகாபெரியவாளை தரிசித்து விட்டு வெளியே வந்த போது வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்மணி ஒருவர் என்னிடம் ஒரு மகாலட்சுமி விக்ரகத்தைத் தந்து பூஜிக்கச் சொன்னார். தினமும் அந்த மகாலட்சுமிக்கு நானும் என் மனைவி பத்மாவதியும் பூஜை செய்கிறோம். பூஜை யறையில் சஞ்சீவிமலை, குபேர கோலம் போடுவதும் எங்கள் தினசரி வழக்கம். பெரிய சமையல் கலைஞரும் அறுசுவை நடராஜனின் சகோதரருமான என் தந்தையார் ‘பேமஸ்’ வெங்கட்ராமய்யர் அறிவுறுத்தியதன்படி, தினமும் ஒரு கிண்ணத்தில் பாலும் தேனும் கலந்து கடவுளுக்கு நிவேதிக்கிறேன்.

இப்போது, சுமார் 2000 குழந்தைகளுக்கு கொன்னக்கோல் மூலம், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், திருவிளையாடற்புராணம், திருக்குறள் ஆகியவற்றைக் கற்றுத்தரும் ஆசிரியராக நான் பணிபுரிகிறேன் என்றால், அது என் பெற்றோர், என் குரு தாயுமானவர் மற்றும் இறையருளால்தான். இந்தக் கொன்னக்கோல், மூச்சுப் பயிற்சியை, தெய்வீகமாக வளர்க்கும் அற்புதக் கலை என்று பேராசிரியர் ஞானசம்பந்தம் குறிப் பிட்டிருக்கிறார்.’’
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum