விஐபி பூஜையறை : டாக்டர் விஜய்சங்கர்
Page 1 of 1
விஐபி பூஜையறை : டாக்டர் விஜய்சங்கர்
பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா?’ என்ற திரைப் பாடலுக்கு நடித்த அந்நாள் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் மகன், மருத் துவர் விஜய்சங்கர். திரைப்படத்தை மட்டுமல்ல, எந்தப் பொருளையுமே பார்த்தால்தான் அதன் தோற்றம், தனித்தன்மை எல்லாம் நன்கு புரியும். இதனாலேயே கண் பிரதான அங்கமாக ஒளிர்கிறது. ‘‘என் தந்தையாரின் விருப்பமும் அதுதான்,’’ கண் மருத்துவரான விஜய்சங்கர் சொல்கிறார். ஆன்மிகப் பாதையில் தன் கண்ணைத் திறந்து விட்டவரும் தன் தந்தையே என்று சொல்லி நெகிழ்கிறார். ‘‘எங்கள் குலதெய்வம் திருச்செந்தூர் முருகன். என்னைப் பொறுத்தவரை செய்யும் தொழிலே தெய்வம், என் மருத்துவமனையே கோயில்.
நான் அறுவை சிகிச்சை செய்து பார்வை மீண்ட சுப்ரமண்யன் என்ற அன்பர் அன்பளிப்பாக தந்த சந்தன விநாயகர் என் மிகச்சிறிய பூஜையறையில் பிரதானமாக வீற்றிருக்கிறார். இன்னொரு அன்பர் தந்த பாதரச பிள்ளையாரும் அப்படித்தான். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை நான் என் ஆன்மிகக் கொள்கையாகவே தரித்திருக்கிறேன். அதனால்தான் பூஜையறையில் என் தந்தையாரின் படத்தை யும் வைத்து வழிபடுகிறேன். அவர் என்னுடனேயே இருக்கிறார்; ஒவ்வொரு விநாடியிலும் என்னைச் சரியாக வழிநடத்துகிறார் என்பது என் நம்பிக்கை, என் அனுபவம், என் பாக்கியம். குலதெய்வமான திருச்செந்தூர் முருகன் படத்தோடு புத்தரின் திருவுருவமும் என் பூஜையறையை அலங்கரிக்கிறது.
அமைதியான புத்தர் என் மனதை எந்த குழப்பத்துக்கும் ஆளாக்காமல் தெளிவாக்குகிறார். என் தந்தையார் பிள்ளையார் பக்தர். எப்போது யாருக்கு அவர் பரிசளித்தாலும் அது பிள்ளையாராகத்தான் இருக்கும். மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர். வயது முதிர்ந்த காலத்தில் என்று இல்லாமல், இளைய பருவத்திலும் தன் ஓய்வு நேரத்தை அவர் பெரும்பாலும் இறை வணக்கத்திலேயே செலவழித்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன். அவரைப் பின்பற்றி, நானும் அனுமார் படத்தில் அனுமனின் வாலுக்கு பொட்டு வைத்து பூஜை செய்திருக்கிறேன். கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்து பிரமித்தி ருக்கிறேன். மூகாம்பிகை அம்மனின் பார்வை ஒரு தாயின் கருணையைப் பரிபூரணமாகக் கொண்டிருந்தது.
இன்றும் அந்தக் காட்சி என் மனதில் சிலிர்ப்பை உருவாக்குகிறது. சுவாமிநாராயண் ஆலய குருஜி தந்த டாலரை ஆன்மிகப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன். எனக்கு மிக நெருங்கிய நண்பர் உடல்நலமின்றி வருந்தினார். அவருக்காக நான் திருப்பதி பெருமாளிடம், ‘உன்னை வந்து தரிசிக்கிறேன்; நண்பர் உடலை சீராக்கு’ என்று உளமாற வேண்டிக்கொண்டேன். அதேபோல நான் திருப்பதி சென்று வந்த பிறகு, வழக்கமான மருத்துவம் தவிர வேறெதை யும் கூடுதலாக எடுத்துக்கொள்ளாத அவர், பூரண குணமானது, பெருமாளை நினைத்து என் கண்களில் நீரை வரவழைத்தது. ஈசனுக்காகக் கண் தானம் செய்த கண்ணப்பன்தான் பிரபஞ்சத்திலேயே முதல் கண் கொடையாளி. இந்தவகையில் கண் மருத்துவரான எனக்கு ஆன்மி கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உண்டானதில் அதிசயம் இல்லை என்றுதான் நான் பணிவாகக் கருதுகிறேன்.’’

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஐபி பூஜையறை : கொன்னக்கோல் வி.வி.எஸ்.மணியன்
» விஐபி பூஜையறை : சித்ரவீணை ரவிகிரண்
» விஐபி பூஜையறை : நடிகர் அருண்விஜய்
» விஐபி பூஜையறை : இயக்குநர் ஸெல்வன்
» விஐபி பூஜையறை : நடிகர் ராஜ்கிரண்
» விஐபி பூஜையறை : சித்ரவீணை ரவிகிரண்
» விஐபி பூஜையறை : நடிகர் அருண்விஜய்
» விஐபி பூஜையறை : இயக்குநர் ஸெல்வன்
» விஐபி பூஜையறை : நடிகர் ராஜ்கிரண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum