விஐபி பூஜையறை : நடிகர் பொள்ளாச்சி பாபு
Page 1 of 1
விஐபி பூஜையறை : நடிகர் பொள்ளாச்சி பாபு
தான் மேற்கொள்ளும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப, முகத் தோற்றத்திலும் அங்க அசைவுகளிலும் மட்டும் முரண்பாட்டைக் காட்டலாமே தவிர, மற்றபடி நடி கர்
பொள்ளாச்சி பாபு மனசு ‘தங்கம்’தான். குரலில் கரகரப்பு இருந்தாலும் ஆன்மிகம் பற்றிப் பேசும்போது அது அப்படியே நெகிழ்ந்துவிடுகிறது. ‘‘ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், பொள்ளாச்சியில் உள்ள ஜமீனில், எங்கள் குலதெய்வமான கருப்பராயருக்கு விசேஷ பூஜைகள் செய்வோம். என் மூதாதையரையும் இதோ, இப்போது என் வரையிலும் எங்கள் பரம்பரையைக் காத்து, வளர்த்து வரும் அந்த தெய்வத்துக்கு நாங்கள் செய்யும் நன்றி காணிக்கைதான் இந்த வழிபாடு.
எத்தனையோ இடையூறுகள், துன்பங்கள் வந்தபோதெல்லாம் அப்படியே ஒருசில நிமிடங்கள் கருப்பராயரை மன முழுவதுமாக தியானிப்பேன். உடனே அந்தப் பிரச்னைகள் எல்லாம் பஞ்சாய் பறந்துவிடும். அப்படியும் ஓரிரு பிரச்னைகள் எனக்கு சாதகமாக முடியவில்லையா, ‘இது நான் கற்க வேண்டிய பாடம், இந்த பிரச்னையை சமாளிக்க உரிய மன, உடல் பலம் கொடு ஐயனே’ என்று அவரையே வேண்டிக்கொள்வேன். உடனே பளிச்சென்று சில யோசனைகள் தோன்றும்; பிரச்னைகளும் தீரும். ‘‘பெரியவர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் உருவாக்கியுள்ள ஆலயத்தில் அருளும் கரிய காளியம்மனும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையும் என் இஷ்ட தெய்வங்கள். எப்ப பொள்ளாச்சி போனாலும் கரிய காளியம்மனை தரிசனம் பண்ணிவிட்டுத்தான் வருவேன். இவ்விரு அம்பிகையர் படங் களும் என் பூஜையறையின் பொக்கிஷம்.
ஒரு முறை, படப்பிடிப்பிற்காக அதிகாலையில் நானே காரை ஓட்டிக் கொண்டு பாண்டிச்சேரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். தாம்பரம் பாலத்தில் இறங்கும்போது யாரோ என் கார் ஸ்டீரிங்கைப் பிடித்து பக்கவாட்டில் இழுப்பது போன்ற பிரமை. நான் அந்த நேரம் என்னையறியாமல் சற்றே கண்ணயர்ந்து விட்டேனா என்றும் எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் சுதாரித்துகொண்டு முழுமையாக என் சுய நிலைக்கு வந்தபோது எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு கனரக வாகனத்தில் மோதாமல் தப்பித்ததை உணர முடிந்தது. என் குலதெய் வம் கருப்பராயரும் கரிய காளியம்மனும் ‘ஜாக்கிரதை, எச்சரிக்கையாக கார் ஓட்டு’ என்று அறிவுறுத்துவது போல தோன்றியது.
அந்தக் கணத்தில் என் உடல் அப்படியே சிலிர்த்தது. காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, கொஞ்ச நேரம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மீண்டும் அந்த
தெய்வங்களை தியானித்தபடி பயணத்தைத் தொடர்ந்தேன். ‘‘புரவிப்பாளையம் கோடிசுவாமிகளை நான் தரிசித்தபோது அவர், தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த மிட்டாயை எனக்கு பிரசாதமாகத் தந்தார். அதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். என் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு என் நண்பர் பரிசாகத் தந்த சிறுவாபுரி முருகர், என் ஊரில் உள்ள பட் டத்தரசி அம்மன், மருவத்தூராள், வெக்காளியம்மன், வேப்பஞ்சேரி பெருமாள், திருவண்ணாமலை ஈசன், வெள்ளெருக்கு பிள்ளையார், திருப்பதி பெரு மாள், லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களும் என் பூஜையறையில் கொலுவிருந்து எங்கள் குடும்பத்தைக் காத்து வருகிறார்கள் என்பதை நான் பரிபூ ரணமாக உணர்கிறேன்.’’

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஐபி பூஜையறை : நடிகர் அருண்விஜய்
» விஐபி பூஜையறை : நடிகர் ராஜ்கிரண்
» விஐபி பூஜையறை : நடிகர் காத்தாடி ராமமூர்த்தி
» விஐபி பூஜையறை : கொன்னக்கோல் வி.வி.எஸ்.மணியன்
» விஐபி பூஜையறை : சித்ரவீணை ரவிகிரண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum