விஐபி பூஜையறை : நடிகர் ராஜ்கிரண்
Page 1 of 1
விஐபி பூஜையறை : நடிகர் ராஜ்கிரண்
“மைசூர் அருகே திப்புசுல்தான் கட்டிய மசூதி இருக்கிறது. ஒரு அரசனாக அறியப்பட்ட அவர் கட்டிய பல மாளிகைகள் அழிந்து விட்ட போதிலும் இன்றும் அது அமைதியாய் நிற்கிறது. திப்புசுல்தானை மன்னர் என்பதைவிட ஒரு மகானாய் பார்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. படப்பிடிப்புக்காக அங்கு சென்ற நான் அந்த மசூதியில் நடந்த தொழுகையில் கலந்து கொண்டேன். அன்று இரவு ‘யாசின்’ என்கிற, ஒரு விஷயத்தை, திப்புசுல்தானுக்காக ஓதினேன். அடுத்த வாரம், அதே மசூதிக்குப் போன போது ஒரு பெரியவர் என் பெயர் சொல்லி அழைத்தார் ‘உனது யாசின் ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என்றார். எனக்கு ஆச்சர்யம். திப்புசுல்தானுக்காக நான் யாசின் ஓதியது எனக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இவருக்கு எப்படித் தெரிந்தது? வியந்து நின்றேன். அருகில் வந்த அவர், ‘இன்னும் 15 நாளில் உனக்கு திருமணம் நடக்கும்’ என்று சொன்னார். அப்போது எனக்கு வயது 50.
திருமண வாழ்வில் பிடித்தமில்லாமல் இருந்த எனக்கு அவர் சொன்ன 10வது நாளிலேயே திருமணம் முடிந்தது. அந்த மகிழ்ச்சியின் தொடர்ச்சியாக ஒரு மகன் இருக்கிறான். குழந்தைக்கு திப்புசுல்தான் என்று அவரே பெயரும் சூட்டினார். அவரது பெயர் சையத் பாபா. இன்றும் எனது முக்கியமான முடிவுகளுக்கு அவர் வழிகாட்டுதல் கிடைக்கிறது. ஒரு பொம்மையில் இருந்த பட்டன் என் மகனின் மூக்கு வழியே நெற்றிப் பொட்டில் ஏறிக் கொள்ள, செய்வதறியாது அழுதபோது பாபா போன் செய்தார். ‘நீ உடனே எழுத்தாளர் பாலகுமாரனிடம் பேசு’ என்றார். நான் பாலகுமாரனுடன் பழகியதில்லை. எப்படியோ தொலைபேசி எண்ணை வாங்கி அவரைத் தொடர்பு கொண்டு விவரம் சொன்னேன். ‘உன் மகனின் பெயரை மாற்றிவிடலாமா’ என்று கேட்டார்.
நான் சையத் பாபா வைத்த பெயர் ஆயிற்றே என தயங்க, ‘இன்னும் ஒரு மணி நேரத்திற்கு என்னை தொந்தரவு செய்யாதே’ என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். அந்த இடைப்பட்ட நேரத்தில் போனில் பேசிய சையத் பாபா,‘பாலகுமாரனின் வார்த்தை என் வார்த்தை. அவர் சொல்படி செய்’ என்று உத்தரவிட்டார். சற்றுக்கெல்லாம் என் மகனுக்கு நல்ல முறையில் ஆபரேஷன் முடிந்து, ‘இனி பயப்பட வேண்டாம்’ என டாக்டர்கள் சொன்னார்கள். அப்போது பாலகுமாரன் பேசினார். ‘ராஜ்கிரண், இனி உன் மகன் பெயர் நைனார் முகம்மது’ என்றார். என் மகனுக்காக அவர் செய்த தீவிரமான பிரார்த்தனை என் குழந்தையை ஆபத்திலிருந்து மீட்டது. அவரை என் குருவாய் வரித்துக் கொண்டேன்.
இந்த வேளாங்கன்னி மாதா சிலையும் யோகி ராம்சுரத்குமார் படமும் அவர் தந்தவை. கொல்லூர் மூகாம்பிகை மீது எனக்கு கனிந்த அன்பு உண்டு. என் தாயாரிடம் பேசுவது போல அவளிடம் பேசுவேன். மயிலாப்பூர் ஷீரடி பாபா கோயிலில் இருந்து இந்த பாபா படத்தை வாங்கி வந்தேன். இவர்கள் நம் முன்னோர் என்கிற உண்மை, பாசமாக எனக்குள் பொங்கியபடி இருக்கிறது. ஈடு இணை இல்லாத இறைவன் உலகத்திற்கு வழங்கிய செய்தியும் ‘அன்பு செய்’ என்பது தானே! அதை என்னளவில் செயல்படுத்த முனைகிறேன்! ”

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஐபி பூஜையறை : நடிகர் அருண்விஜய்
» விஐபி பூஜையறை : நடிகர் பொள்ளாச்சி பாபு
» விஐபி பூஜையறை : நடிகர் காத்தாடி ராமமூர்த்தி
» விஐபி பூஜையறை : இயக்குநர் ஸெல்வன்
» விஐபி பூஜையறை : அபஸ்வரம் ராம்ஜி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum