விஐபி பூஜையறை : அபஸ்வரம் ராம்ஜி
Page 1 of 1
விஐபி பூஜையறை : அபஸ்வரம் ராம்ஜி
விஐபி பூஜையறை : அபஸ்வரம் ராம்ஜி
கருத்துகள்
12:36:06
Monday
2013-01-28
Kulalinitu, yalinitu infancy tell you that the hearing of the Kural unarntiruppavar fact that the object is apasvaram Ramji. Three of his 43-year career, he has contended for the past 13 varutankalakattan colki figure.
What fixed deposits are?
MORE VIDEOS
குழலினிது, யாழினிது என்று சொல்பவர்கள் மழலைச் சொல் கேளாதவர் என்ற குறளின் உண்மைப் பொருளை உணர்ந்திருப்பவர் என்றே அபஸ்வரம் ராம்ஜியைச் சொல்லலாம். தனது 43 மூன்று வருட இசை வாழ்க்கையில், தான் கடந்த 13 வருடங்களாகத்தான் மன நிறைவு பெற்றிருப்பதாகச் சொல்கி றார். ஆமாம், இசை மழலை என்னும் குழுவை உருவாக்கி, அவர்களுடன் 4700 மேடைக் கச்சேரிகளை நடத்தி, பல மழலை இசை மேதைகளை அவர் உருவாக்கியிருக்கிறார்; அவர்கள் இன்று பல மேடைகளில், திரைகளில் தம் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். மழலையோடும் இசை யோடும் இயைந்துவிட்ட அவரது ஆன்மிக உணர்வுகள், இங்கே:
‘‘கொல்லூர் மூகாம்பிகை, என் வாழ்வில் நம்பிக்கையூட்டி வளர்த்து வரும் அன்னை என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்கிறேன். ஆமாம், அன் னையை தரிசித்த நாளிலிருந்துதான் நான் உயரே செல்ல ஆரம்பித்தேன்; கீழே இறங்கவே இல்லை. இதற்கு அன்னையை தரிசனம் செய்துவரும் என் போக்குவரத்து முறையே உதாரணம். இருக்கை முன்பதிவு செய்யாத ரயிலில், பதிவு செய்த ரயிலில், குளிர்வசதி கொண்ட ரயிலில், சொந்த காரில், விமானத்தில் என்று என் பயண வசதியையே வளர்த்துக் கொடுத்தவள் அன்னை மூகாம்பிகை. இந்த தரிசனம் 29 வருடங்களாக நீடித்து வருகிறது! முத்தாய்ப்பாக, வி.என்.ஜானகி முதல்வராக இருந்த போது அவர் என்னை தன்னுடன் கொல்லூருக்கு அழைத்துச் சென்றதைச் சொல்லலாம்.
ஸ்ரீவைகுண்டம் என் சொந்த ஊர். குலதெய்வம், திருச்செந்தூர் முருகன். பல ஊர்களில், பல கோயில்களை, அந்தந்த ஊர்களில் கச்சேரி செய்யப் போகும்போதே தரிசித்திருக்கிறேன். முக்கியமாக ‘ஜெய ஜெய சங்கர’ என்ற தலைப்பில் 204 பகுதிகள் கொண்ட தொடரைத் தயாரித்து அளித்ததை அரும்பெரும் ஆன்மிகச் சேவையாக நான் கருதுகிறேன். இதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ‘‘தினமும் பூஜையறையில் கடவுளை வணங்கிவிட்டு என் பெற்றோர், என் மூதாதையர் அனைவரையும் மனதார நினைத்து வழிபடுவேன். என் வீட்டிற்கு அருகில் உள்ள அறுபடைவீடு முருகன் ஆலயத்தின் முன் நின்று, அருள் புரிய வரம் கோருவேன். தினமும் விநாயகர் அகவல் பாராயணம் செய்வேன்.
அமாவாசை அன்று 20 ஏழை முதியோர்களைத் தேடிச் சென்று உணவும் நீரும் தருவது என் வழக்கம். சரஸ்வதி பூஜையை என் வீட்டில் விசேஷமாகக் கொண்டாடுவோம். அன்று சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளால் வீடே திருவிழாக்கோலம் காணும். ‘‘கடவுள் என் தேவைக்கு மேலேயே எனக்கு அனைத்தையும் தந்திருக்கிறார். எனவே அவரிடம் எதையும் வேண்டி நான் பெற விரும்புவதில்லை.’’
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஐபி பூஜையறை : நடிகர் ராஜ்கிரண்
» விஐபி பூஜையறை : டாக்டர் விஜய்சங்கர்
» விஐபி பூஜையறை : கொன்னக்கோல் வி.வி.எஸ்.மணியன்
» விஐபி பூஜையறை : சித்ரவீணை ரவிகிரண்
» விஐபி பூஜையறை : நடிகர் அருண்விஜய்
» விஐபி பூஜையறை : டாக்டர் விஜய்சங்கர்
» விஐபி பூஜையறை : கொன்னக்கோல் வி.வி.எஸ்.மணியன்
» விஐபி பூஜையறை : சித்ரவீணை ரவிகிரண்
» விஐபி பூஜையறை : நடிகர் அருண்விஜய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum