தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஐபி பூஜையறை : சித்ரவீணை ரவிகிரண்

Go down

விஐபி பூஜையறை : சித்ரவீணை ரவிகிரண் Empty விஐபி பூஜையறை : சித்ரவீணை ரவிகிரண்

Post  meenu Thu Mar 07, 2013 6:11 pm

விதவிதமான செயல்களைச் செய்பவர்கள் புகழ்பெறுவதில்லை; ஆனால் வித்தியாசமாக செயலாற்றுபவர்கள் பிரபலமாகிறார்கள். அந்த வகையில் ரவிகி ரண் ஓர் உதாரணம். சித்ரவீணை என்ற அபூர்வ இசைக்கருவியை இயக்கி, உலகையே பிரமிப்பால் நிறைவித்திருக்கிறார். சித்ர வீணையில் இவர் வாசிக்கும்போது, ஓரளவுக்காவது இசை தெரிந்தவர்கள் அந்த இசையை வெறும் ஒலியாக மட்டுமல்ல; மனத்திரையில் சித்திரமாகவே ஓடவிட்டு ரசிப்பார் கள் என்பது உலகளாவிய உண்மை. ஆன்மிகம் இழையோடாத இசையே இல்லை என்பது இவரது ஆணித்தரமான கருத்து. ஆன்மிகத்தைப் பற்றி வேறு என்ன சொல்கிறார்?
‘‘கடவுள் கூடவே இருக்கிறார் என்பதை நான் அனுபவப் பூர்வமாகவே உணர்ந்திருக்கிறேன். மும்பையில் ஒரு கச்சேரிக்கு வாசிக்க வேண்டும்.

நான் தங்கியிருந்த அறையில் ஜன்னலருகே வைத்திருந்த என் சித்ரவீணை, எதிர்பாராத பலத்த காற்று, மழையால் கீழே தள்ளப்பட்டு சேதமடைந்தது. மறு நாள் மகாராஷ்டிர ஆளுநர் உட்பட பலர் என் இசைக் கேட்கக் காத்திருப்பார்கள்! உடனே சென்னைக்குப் புறப்பட்டு, இன்னொரு சித்ரவீணையை எ டுத்து வரவும் நேரமில்லை. உடனே மும்பை வானொலி நிலைய ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளரிடம் தொடர்பு கொண்டு, சித்ரவீணை அவர் வசம் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டேன். அவரும் இசைக்கருவிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று ஒரு பரண் மீது தூங்கிக்கொண் டிருந்த ஒரு சித்ரவீணையை தூசி தட்டி எழுப்பினால், அது ஏற்கெனவே பழுதுபட்டிருந்தது! உடனே இசைக்கருவிகள் பழுது பார்க்கும் கடையைத் தொடர்பு கொண்டேன். அன்றுதான் சென்னையிலிருந்து பழுது நிபுணர் வந்திருப்பதாகவும் அவர் சரிசெய்துத் தருவார் என்றும் சொன்னார்கள்.

அன்றே இரவோடு இரவாக அதைச் சீர்திருத்தி, மறுநாள் நான் இசைத்தபோது நானே அதிசயப்படும் அளவுக்கு அதில் அற்புத நாதம் புறப்பட்டு ஆயிரக்க ணக்கான பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது. சரியான காரணம் என்ன தெரியுமா? என் பதைபதைப்பை உணர்ந்து எனக்காகக் கூடவே இருந்து என் மீட்டலில் வெளிப்பட்டதே அந்த இறையருள்தான். ‘‘என் பூஜையறையில் லட்சுமி, சரஸ்வதி, விநாயகரோடு கூடிய திருப்பதி பெருமாள்-தாயார் (என் 11வது வயதில் திருப்பதியில் செய்த கச்சேரிக்காகக் கிடைத்தப் பாராட்டு), இடது கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் மகாபெரியவர், மேரு படம் (என் மாமனார் வீட்டு சீதனங்கள்) என்று பொக்கிஷங்கள் நிறைந்திருக்கின்றன.

‘‘உலகெங்கும் பல மகான்கள், ஆன்மிகவாதிகள் முன்னிலையிலும் பிரபல ஆலயங்களிலும் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கடவுள் என் னுடனேயே வந்து என் வெற்றிக்கு வித்திடுகிறார் என்பது உண்மை. குறிப்பாக இறைத் தூதர்களான புட்டபர்த்தி சத்ய சாயிபாபா, காஞ்சி மகா பெரிய வர் முன்னிலையில் வாசித்தது இந்த ஜன்மத்தில் நான் பெற்ற பேறு. கூடவே கீர்த்தனைகள் இயற்றும் ஆற்றலும் எனக்குக் கைவரப்பெற்றதும் இறைய ருளல்லாமல் வேறில்லை. எதை எப்போது, எப்படித் தரவேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும். ஆனாலும் நான் இறைவனிடம் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான்: ‘இப்போது போல எப்போதும் என் கூடவே இருங்கள், ஐயனே’’’.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum