விஐபி பூஜையறை : இயக்குநர் ஸெல்வன்
Page 1 of 1
விஐபி பூஜையறை : இயக்குநர் ஸெல்வன்
‘சேலம்-ஆத்தூர் சொந்த ஊர். வளர்ந்ததெல்லாம் விருத்தாசலத்துல. படிப்புக்காக சென்னைக்கு வந்து, இயக்குநர் ஷங்கர் சார்கிட்ட சினிமா படிச்சது கடவுளின் கருணை. என் முதல் படம் ‘சூரி’ நல்ல அறிமுகமா இருந்தது. அடுத்தடுத்து ஓட்டந்தான்னு நினைச்சு ‘கிருஷ்ண லீலை’ படம் செஞ்சிகிட்டிருந்தேன். படம் முடிஞ்சு ரிலீஸ் தேதி கூட முடிவு செஞ்சிருந்த நேரத்துல என் நண்பர் ஒரு ஜோதிடர்கிட்ட அழைச்சிட்டுப் போனார். அந்த ஜோதிடர், ‘படம் இப்போ ரிலீஸ் ஆகாது’ன்னார். நான் சிரிச்சிக்கிட்டே வந்துட்டேன். ஆனால், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் என் மனசை உள்முகமா திருப்பி விட்டுடுச்சு. இது ஏன் நடந்தது? நமக்கு இதன் மூலமா என்ன சொல்லப்படுதுன்னு கேள்விகளை பிடிச்சிக்கிட்டு யோசிக்க ஆரம்பித்தேன்.
கிருஷ்ண லீலை ரிலீஸுக்கு சிக்கல் வந்துச்சி. எப்படின்னு திகைச்சிப் போனேன். அதேசமயம் புதுச்சேரிக்கு லொக்கேஷன் பார்க்கப் போனப்ப விபத்துல சிக்கி மீண்டது பெத்தவங்க செஞ்ச புண்ணியம். அந்த விபத்தால எனக்கு பேச வரல. என்னால பேச முடியுமா? முடியாதான்னு டாக்டர்களால சொல்ல முடியல. தனியா வெளிய போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். என்ன ஆனாலும் பரவாயில்லைனு திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் போக முடிவு செஞ்சேன். தனியா பஸ் ஏறி, கண்டக்டர்கிட்ட எழுதிக்காட்டி டிக்கெட் வாங்கினேன். திருவண்ணாமலை போய் ரமணரையும் யோகி ராம்சுரத்குமாரையும் தரிசனம் செஞ்ச பிறகு நம்மால தனியா பயணிக்க முடியும்னு நம்பிக்கை வந்துச்சு. மக்களோட அதிகமா பழகி, கொஞ்சம் கொஞ்சமா என் பேச்சை மீட்டெடுத்தேன்.
திருவண்ணாமலை-கொண்டம் சிவகுருநாதன் ஒரு சிவனடியார். அவர் என்னை கடந்த வாரம் ராமேஸ்வரம் கூட்டிக்கிட்டு போய், அந்தக் கோயில்ல இருக்கற எல்லா தீர்த்தத்துலயும் நீராட வெச்சி, சிவ தரிசனம் செய்ய வைத்தார். என் கஷ்டமெல்லாம் முடிஞ்சதுன்னு மனசு சொல்லுச்சு. திருச்செந்தூர் முருகனைப் பார்த்தேன்; தெம்பு வந்த மாதிரி இருந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி வெளிச்சம் என் மனசை நெகிழ வைக்க, அப்படியே அழுதுட்டேன். விருத்தாசலம் வந்து பெத்தவங்க மாதிரி என்னை பாதுகாக்கற விருத்தகிரீஸ்வரரையும் அம்மனையும் பார்த்துவிட்டு சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். போன வருஷம் பிப்ரவரி 1ந் தேதி விபத்துக்குப் பிறகு நான் நல்லா பேச ஆரம்பிச்ச சந்தோஷத்தை இந்த பேட்டி மூலமாக அனுபவிக்கிறேன்.
என் பூஜையறையில இருக்கற இந்த ஷீரடிபாபா, மயிலாப்பூர்ல வாங்கினது. இது ஆத்தூர் போதமலை அடிவாரத்துல இருக்கற எங்க குலதெய்வம் இளங்காளியம்மனோட யந்திர ரூபம். இந்த கிருஷ்ணர் படம் என் நண்பர் தந்தது. இந்த விருத்தகிரீஸ்வரரும் அம்பாளும் எனக்கு வந்த கல்யாணப் பரிசு. இந்த ரூபாய் நோட்டுகள் ஸ்ரீரங்கத்துல பிரசாதமா வந்தது. இந்த சங்கு சுசீந்திரத்துல வாங்கினது. கடவுள் அருளால எனக்கு பேச்சு திரும்ப கிடைச்சிடுச்சு. இனி சினிமா வேலையை தீவிரமா செய்வேன். அதன் வெற்றி, தோல்விகள் என்னைக் கொஞ்சமும் பாதிக்காது. ஏன்னா எதுவும் நம் கையில் இல்லைங்கற தெளிவை, இந்த ஒரு வருட கட்டாய மௌனம் எனக்குத் தந்திருக்கு!’’

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஐபி பூஜையறை : நடிகர் ராஜ்கிரண்
» விஐபி பூஜையறை : அபஸ்வரம் ராம்ஜி
» விஐபி பூஜையறை : டாக்டர் விஜய்சங்கர்
» விஐபி பூஜையறை : கொன்னக்கோல் வி.வி.எஸ்.மணியன்
» விஐபி பூஜையறை : சித்ரவீணை ரவிகிரண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum