தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஐபி பூஜையறை : வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம்

Go down

 விஐபி பூஜையறை : வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் Empty விஐபி பூஜையறை : வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம்

Post  meenu Thu Mar 07, 2013 6:07 pm

இந்த வயதிலும் (85) கணீரென்று வில்லுப்பாட்டை சுப்பு ஆறுமுகம் இசைக்கிறார் என்றால் அதற்கு அவருடைய ‘வில் பவர்’தான் முக்கிய காரணம் என்றால் மிகையில்லை. கவிஞர், இசைக் கலைஞர். இறைவன், மனித நல்லொழுக்கம், தேசப் பற்று என்று தன் வில் வித்தையால் வித்தகம் காட்டி உலகையே தன்பால் ஈர்த்தவர். அவரது ஆன்மிக அனுபவங்கள்: ‘‘என் பூஜையறையின் பிரதான பொக்கிஷம், நான்குமுக குத்துவிளக்கு. நான்கு வேதங்கள், சைவ சமய நால்வர் இந்த விளக்கு வடிவாகவே திகழ்வதாகவே நான் கருதுகிறேன். ஏனென்றால், 250 வருடங்களாக எங்கள் குடும்பத்தில், பரம்பரை பரம்பரையாக இந்த விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது. மகா பெரியவா தன் கரத்தால் எனக்கு வழங்கிய அவரது திருப்புகைப்படம், மகாபெரியவர் விக்ரகம், அம்பிகையின் பாதங்கள், ராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர், எனக்கு தீட்சை தந்த ரங்கனாதானந்தா மற்றும் பாரதமாதாவும் என் புஜையறையின் புனிதம் ஓங்கச் செய்கிறார்கள்.

என் சொந்த ஊர் திருநெல்வேலிக்கருகே உள்ள சத்திரம்புதுக்குளம். எங்க குலதெய்வம் நெல்லையப்பர்-காந்திமதியும் திருச்செந்தூர் முருகனும். அடிக்கடி அவர்களை தரிசிப்பேன். ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று எங்கள் குடும்பமே திருச்செந்தூரில் இருக்கும். என் இஷ்ட தெய்வம் காஞ்சி காமாட்சியம்மன். ஒரு முறை நெல்லையப்பரை தரிசிக்க முடியாத சூழ்நிலையில் காஞ்சிமுனிவரை தரிசிக்கத் தோன்றியது. நான் எழுதிய காந்தி சரித்திரம் எனும் நூலை அவரிடம் சமர்ப்பித்தேன். அதில் கால்காந்தி, அரைகாந்தி, முக்கால்காந்தி என இல்லாமல் முழுகாந்தியாக வாழும் அன்பர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் என எழுதியிருந்தேன். அதைப்படித்த பெரியவா சிரித்து விட்டு என்னை, மறுநாள் அங்கு நடக்கும் சில்பசதஸில் திருநாவுக்கரசரைப்பற்றி வில்லுப்பாட்டு பாடுமாறு உத்தரவிட்டார்.

காமாட்சி சந்நதியில், ஒரே இரவில் பெரியவா அனுக்ரஹத்தால் 48 பாட்டுகள் எழுதி மறுநாள் சதஸில் வில்லுப்பாட்டாகப் பாடினேன். சற்றுத் தொலைவிலிருந்து ரசித்த பெரியவா இரு கரம் தூக்கி என்னை வாழ்த்தியது என் பிறவிப் பேறு. கூடவே தன் திருப்புகைப்படத்தையும் வழங்கியது அந்த பேற்றின் போனஸ்! ‘எல்லா கதையையும் சொல்றயே? என் கதையை வில்லுப்பாட்டுல சொல்லமாட்டியா?’ என்று பெரியவா கேட்டபோது அப்படியே திகைத்துப்போனேன். ‘பரசுராமக்ஷேத்திரத்திலே எங்க ஆதிகுரு ஆதிசங்கரர்லேயிருந்து ஆரம்பி’ என்று வழியும் காட்டினார். விக்கு விநாயகராம் அவர்கள் எழுதிய புத்தகம், மற்றும் ஒரு நண்பர் மூலமாக பெரியவா சரித்திரத்தை உள்வாங்கி, ‘காலடி முதல் காஞ்சி வரை’ எனும் தலைப்பில் வில்லுப்பாட்டாக வடிவமைத்தேன்.

கடவுள் கொடுத்தது மானிட வேடம்,
கல்விக் கூடத்தில் கிங்ஜான் வேடம்
அன்று அவர் படித்தது இங்கிலீஷ் பாடம்
எதிர்பார்த்திருக்குது காமகோடி பீடம்

உலக நாடகம் நடத்திண்டு வந்தவர் நடித்தார்... என்று நான் எழுதிய வரிகளை, இசையரசி எம்.எஸ். என்னை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டு பரவசமடைந்தார். தினமும் அன்னை காமாட்சியிடம் ‘என்னிடம் ஏராளமாகக் கவலைகள். அவை உன்னிடம் இல்லாததால் அவற்றை உன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். இந்தியாவில் தமிழகத்தில், கவிஞனாக, இசைக் கலைஞனாகப் பிறக்க வைத்தாயே, இதை விட வேறென்ன பேறு எனக்கு வேண்டும்!’ என உளமார்ந்த சரணாகதி செய்வதே என் தினசரி பிரார்த்தனை.’’
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum