மன இறுக்கத்திற்கு ஒரு மாபெரும் மருந்து ரீகி!
Page 1 of 1

ரீகி என்பது நமது கைகளால் நம்முடைய நோய்களை குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் பெற்ற ஒரு புனிதமான தெய்வீகக் கலை.
ரீகி என்பதற்கு பிரபஞ்ச உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த உயிர் சக்தி எல்லா உயிரினங்களிலும் பாய்ந்து பரவி உள்ளது. ரீகி என்றாலே தொட்டுப் பண்ணும் கலைதான். அந்த கையில் உள்ள தொடு உணர்ச்சி ஒரு மின் காந்தத்தை உண்டாக்கி, மின் அதிர்வுகளை உண்டாக்கி, நம் உடம்பில் உள்ள சக்தியின் ஓட்டத்தை சமனப்படுத்தி, ஒரு நிலைப்படுத்தி புத்துணர்ச்சி அளிக்கின்றது. ஏனென்றால் கையில் உள்ள சக்தி உடல் முழுவதும் பரவி அந்த மனநிலையை உண்டாக்குகின்றது.
உயிர்ச்சக்தியை கீ என்று சைனாவிலும், பிராணா என்று சமஸ்கிருதத்திலும் மானா என்று ஹவாயிலும் கூறுவார்கள். இந்த உயிர் சக்தியை பிரபஞ்சத்தில் இருந்து எடுத்து மனித உடலின் வழியாக பாய்ச்சும் பொழுது அது ஒவ்வொரு செல்களிலும் சென்று அங்கே உள்ள உயிர்ச் சக்தி தடையை மாற்றி, சக்தியின் ஓட்டத்தை சீராக்குகின்றது.
நோயாளிக்கு எவ்வளவு சக்தி தேவையோ, அவ்வளவு சக்தி உள்ளே சென்று நோய் தீர்க்கும் ஆற்றலை தூண்டி விடுகின்றது. நோயை தீர்ப்பதற்கு உதவி செய்கின்றது. ரீகி செய்வதால் ஆழ்ந்த அமைதி கிடைக்கும். அதாவது நம்முடைய துயரம், பதட்டம், மன இறுக்கம் எல்லாம் விலகி நோய் தீர்க்கும் ஆற்றல் அதிகமாகிறது.
மேலும் உடம்பில் உள்ள வலி மற்றும் உபாதைகள் போய் அமைதி கிடைக்கின்றது. பொதுவாக ரீகி நோயைத் தீர்த்து சக்தியின் ஓட்டத்தை, சமனப்படுத்தி உடலை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருகின்றது.
ரீகியை கற்றுக் கொள்ள சுருங்கக் கூறின் பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்த பொது அறிவு மட்டும் போதும். மனிதனாக இருக்க வேண்டும். கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார், இங்கே மிருகம் பாதி தெய்வம் பாதி மனிதனடா. ரீகி தீட்சை பெற்றவுடன் அண்டசராசரங்களில் உள்ள சக்தி தலைவழியாக கைகளுக்கு வந்தடைகிறது. கைகளில் குறுகுறு என்று போவது தெரியும். கைகளில் இதமான சூடு இருக்கும். பிறகு போக போக மற்றவர்களுடைய சக்தியின் ஓட்டத்தை அறிய முடியும். ஒரு மின்காந்தம் உடலில் பாய்வது போல் ஒரு ஆனந்தமான ஒரு உணர்வு ஏற்படும். ஒரு மாஸ்டரிடம் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும்.
எப்படி நோய் குணமாகிறது?
ரீகி என்பது நோய்க்குள்ள காரணத்தை சரி செய்துவிட்டு, நோயைத் தீர்க்கின்றது. இதில் பக்க விளைவுகள் கிடையாது. நம்முடைய சக்தியும் வீணாவதில்லை. முழுமையான ஆளுமைப் பயிற்சிக்கு மனிதனை தயார் செய்து நோய் எதிர்ப்புச் சக்தியை மேலும் பலப்படுத்துகின்றது.
உடலில் உள்ள நச்சுத் தன்மையை எடுத்து வலியை குறைக்கின்றது. ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டு விட்டால் உடனே அந்த காயத்தை சரி செய்கின்றது. ரீகி மூலம் நாட்பட்ட வியாதிகளை குணப்படுத்தி விடலாம். அலோபதி மருத்துவத்துடன் சேர்ந்து ரீகி பண்ணினால், இயற்கையிலேயே உள்ள நோய் தீர்க்கும் சக்தி தூண்டப்பட்டு நோயாளிக்கு விரைவில் குணம் கிடைக்கும்.
மன இறுக்கத்திற்கு ஒரு மாபெரும் மருந்து
மனதளர்ச்சி நீங்கி நிம்மதி தோன்றும். மனத்தளர்ச்சி, மனச்சோர்வு, பயம் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும். வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தோடு, புதிய நம்பிக்கையோடு பார்க்கக் கூடிய அளவிற்கு மன மாற்றம் உண்டாகும். நம்மை நாமே நேசிக்கும் குணமும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் எண்ணமும் தோன்றும். சுயசிகிச்சை மூலம் நம்மை நாமே காத்துக் கொள்ளும் எண்ணம் உண்டாகிறது. ரீகி மூலம் மனத்தெளிவு உண்டாகிறது. ஆக்கப்பூர்வ திறன் அதிகமாகி நம்முடைய உள் மனம் தூண்டப்பட்டு இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஒரு இணைப்பை புதுப்பித்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு ரீகி பண்ணும் போது அவர்களும் இதையே உணர்வார்கள்.
மூளைக்கு ரீகி
மனிதனின் மூளையில் உள்ள நியூரான்கள் எல்லாம் வயது ஆக ஆக இறந்துவிடுவதில்லை. கொஞ்சம் லேசாக சுருங்கிவிடுகிறது. அதற்கு ரீகி சக்தியை கொடுக்க கொடுக்க பழைய மாதிரி செயல் திறனுக்கு வந்துவிடும். அதனால் மூளை என்ற கம்ப்யூட்டர் துருபிடிக்காமல் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு ரீகி உதவி செய்கிறது.
மூட்டுவலிக்கு ரீகி
உலகத்தில் பல மக்களுக்கு மூட்டு வலி நோய் அதிகமாக உள்ளது. சிலருக்கு கை மூட்டு மட்டும் வலிக்கும். சிலருக்கு எல்லா மூட்டுகளும் தாக்குகிற மாதிரி வலி வருகிறது. சிலருக்கு காய்ச்சல் மூலம் மூட்டு வலிகள் வரும். குழந்தைகளுக்கும் மூட்டு வலிகள் வருகின்றன. யூரியாவால் மூட்டு வலிகள் வருகின்றன. சிலருக்கு பரம்பரையாக மூட்டு வலிகள் வருகின்றன. எலும்பு வளர்ச்சியால் கழுத்து பகுதியில் மூட்டு வலிகள் வருகின்றன. இப்படி வெவ்வேறு விதமான மூட்டு வலிகள் நிறைய பேருக்கு வருகின்றது. வயதானவர்களுக்கு எலும்பு தேய்ந்துவிட்டதால் மூட்டு வலிகள் வருகின்றது என்று கூறுகிறார்கள்.
ரீகியின் தூய சக்தியை எலும்புகள் சேருமிடத்தில் பாய்ச்சினால் மூட்டு வலிகள் குணமடையும். ரீகியின் இறை சக்தியால் இரத்த ஓட்டம் சரியாக சென்று, வெப்ப ஓட்டம் சரியாக சென்று, இரத்த நாளங்களில் எல்லாம் சக்தி சென்று புது செல் உருவாகி மிக விரைவில் மூட்டு வலிகள் குணமடைகின்றன. இது ரீகியின் அனுபவபூர்வமான உண்மை.
நன்றி : ஹிப்னோ தெரபி
(மனநல மருத்துவ மாத இதழ்)
ஆகஸ்ட், 2000.
ஆசிரியர் : டாக்டர் வேதமாலிகா.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum