காய மருந்து
Page 1 of 1
காய மருந்து
தேவையான பொருட்கள்:
அதிமதுரம் -25 கிராம்
ஏல அரிசி-25 கிராம்
சீரகம்-25 கிராம்
ஜாதிக்காய்-25 கிராம்
ஜாதிபத்திரி-25 கிராம்
கருஞ்சீரகம்-25 கிராம்
வால்மிளகு-25 கிராம்
இலவங்கப்பத்திரி-25 கிராம்
குறுசாணி ஓமம்-25 கிராம்
தாளிசபத்திரி-25 கிராம்
இலவங்கப்பட்டை-25 கிராம்
அரிசி திப்பிலி-25 கிராம்
அரிசி திப்பிலி மூலம்-25 கிராம்
கிராம்பு-25 கிராம்
ஓமம்-300கிராம்
சுக்கு-50 கிராம்
மிளகு-50 கிராம்
பெருஞ்சீரகம்-50 கிராம்
கசகசா-100 கிராம்
பனைவெல்லம்-2 கிலோ
பசு நெய்-2 கிலோ
பசும்பால்.
செய்முறை:
1 முதல் 21 வரையுள்ள சரக்குகளை தனித்தனியாக மண்சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எல்லா சரக்குகளையும் ஒன்றாகப் போட்டு இடித்து வடிகட்டவேண்டும். சரக்கு மிச்சப்படாமல் இடித்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். இருமபுக் கடாயில் பனைவெல்லத்தை இடித்துப் போட்டு 400- மி.லிட்டர் பசும் பாலை ஊற்றி விறகடுப்பில் வைத்து பாகு பதம் வந்ததும் மருந்துச் சரக்கைப் போட்டு நன்றாகக் கிண்டி இறுகும் சமயத்தில் நெய்யை ஊற்றிக் கிண்டி இறக்கவேண்டும். ஆறிய பின் மருந்தை கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்த மருந்து மகப்பேற்றிற்குப் பிறகு உண்ண வேண்டியது.
மகப்பேறு முடிந்து 18 நாட்கள் கழித்து மருந்துண்ணத் துவங்க வேண்டும். காலை உணவு முடித்து 10 கிராம், இரவு உணவு முடித்து 10 கிராம் வீதம் 40 நாட்களுக்கு மேல் 80 நாட்கள் வரையிலும் உட்கொள்ளலாம்.
தீரும் நோய்கள்:
மகப்பேற்றிப் பிறகு ஏற்படும் வயிறு தொடர்பான நோய்கள் குறையும். உடலில் நல்ல வலியும் வனப்பும் ஏற்படும். தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் இது மிகவும் நல்லது.
குறிப்பு:
இந்த மருந்தைத் தொடர்ந்து உண்பதால் எந்தத் தீங்கும் ஏற்படாது. மருந்துண்ணும் நாட்களில் பழங்கள், குளிர்ந்த பானங்கள் இவைகளைக் கண்டிப்பாக நீக்கவேண்டும்.
மருந்துண்ணும் நாட்களில் மலக்கட்டு ஏற்பட்டால் உணவில் அல்லது மருந்துடன் சிறிது பசு நெய் கலந்து கொள்ளவேண்டும். இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் மலங்கழிந்தால் மருந்துடன் சிறிது தேன் சேர்த்து அருந்தி வர வேண்டும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum