தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்

Go down

சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் Empty சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்

Post  meenu Mon Jan 14, 2013 3:06 pm

நரசிம்மம் என்றாலே உக்ரமும், பிரம்மாண்டமும் தான் நினைவுக்கு வரும். இத்தகையவர் சாந்த மூர்த்தியாக இருந்தால் யோக நரசிம்மர் என்கிறார்கள். கருணையே வடிவமாகக் காட்சி தரும் நரசிம்மரை சோளிங்கரில் காணலாம். சோழ நாட்டைப் போல இந்த ஊரும் வளமான பகுதியாக இருப்பதால் சோழ சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டது.

அதை ஆங்கிலேயர் தங்கள் பங்குக்கு சுருக்கி சோளிங்கர் ஆக்கி விட்டார்கள். இங்கு யோக நரசிம்மர் கோவில் சுமார் எழுநூறு அடி உயரமுள்ள ஒரு மலையின் மேல் உள்ளது. சுலபமாக ஏற படிக்கட்டுக்கள் அமைத்துள்ளனர். திருத்தணி-சித்தூர் சாலையை அடைந்து அதிலிருந்து பிரியும் பாதை வழியாக மலையடிவாரத்தை அடையலாம்.

அடிவாரத்திலிருந்து பார்த்தால் கொஞ்சம் மலைப்பாக இருக்கும். மலையின் உயரம் 750 அடி. 1305 படிகள் ஏறுவது சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சுற்றி வளைத்துக் கட்டியிருக்கிறார்கள். படிகளில் ஏறும்போது சூடு தெரியாமலிருக்க காலை 11 மணிக்கு முன்போ, மாலை 4 மணிக்கு மேலேயோ படியேறி இறங்கி விடலாம்.

சிறப்புகள்:

மலைக் கோவிலின் பிரதான வாயில் வடக்கு பார்த்து உள்ளது. உள்ளே சென்றால் கிழக்கு நோக்கிய வண்ணம் யோக நரசிம்மர் அமர்ந்துள்ளார். எப்போதும் மாலை அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். மூலவர், காலைக் குத்திட்ட நிலையில் கைகளை நீட்டியபடி அமர்ந்த கோலத்திலுள்ள நல்ல கம்பீரமான படுசாந்தமான திருவுருவம்.

பக்தர்களின் குறைகளைக் களைவதில் மிக்க ஆர்வமுள்ளவர். வெள்ளிக் கிழமைகளில் காலை 10 மணிக்குமேல் திருமஞ்சன சேவை. அருகே அமிர்தவல்லித் தாயாரும் உள்ளார். அத்ரி, ஜமதக்னி, வசிஷ்டர், வாமதேவர், காச்யபர், கவுதமர், பரத்வாஜர் என்ற ஏழு ரிஷிகளுக்கு, அவர்கள் வேண்டுகோளின்படி ஒரு சொடி சாந்த சொரூபியாக காட்சியளித்தார்.

அதனாலேயே இது கடிகாசலமாயிற்று. ஆழ்வார்கள் இதைக் கடிகை என்றே மங்களா சாசனம் செய்துள்ளனர். கடிகை என்ற சொல்லுக்கு நாழிகை என்று பொருள். இந்த திவ்ய பகுதியில் ஒரு நாழிகை நேரம் தங்கினால் முக்தி சித்திக்கும் என்பது நம்பிக்கை. யோக நரசிம்மரின் குன்றுக்கு எதிரில், சின்ன மலையில் யோக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.

4 திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். கையில் சங்கு சக்கரத்தோடு விளங்குகிறார். வடமதுரை மன்னன் இந்த்ரத் ஒரு நாள் வேட்டையில் ஒரு பெண்மானைத் துரத்திக் கொண்டு பல காதங்கள் கடந்து வந்து விட்டான். கடைசியாக மான் மீது அம்பு தொடுக்கும் போது ஒரு ஜோதி தோன்றி மறைந்தது.

மன்னன் அதைத் தொழுது வணங்கி வேட்டையாடுவதை நிறுத்தினான். அப்போது கும்போதரன் என்ற அசுரன் அங்குள்ள மக்களை வாட்டி வதைப்பது தெரிந்தது. ஜோதியாகத் தோன்றி மன்னனுக்கு அருள் பாலித்த பகவான், ஆஞ்சநேயரிடம் சங்கு, சக்கரங்களை கொடுத்து இந்த்ரதியும்ன் மன்னனைக் காப்பாற்றும்படி சொல்ல அதன்படியே செய்து முடித்தார் ஆஞ்சநேயர்.

பின் பகைவர்களை அழித்த சங்கு சக்கரங்களை குன்றிலுள்ள குளத்தில் சுத்தம் செய்து நரசிம்மரிடம் கொடுத்தார். அப்போது, எம்பெருமான் ஆஞ்சநேயரை நோக்கி இன்று முதல் நீ என்னைப் போல் சங்கு சக்கரம் தரித்து நான்கு கரங்கள் கொண்டு எனக்கெதிரில் வீற்றிருந்து என்னையும் உன்னையும் நாடி வரும் அன்பர்களைக் காப்பாயாக என்று அருளினார்.

பெரிய மலையை விட்டுக் கீழே இறங்கி கொஞ்சம் நடந்து அருகிலுள்ள சின்னமலை மீது ஏறினால் அனுமனைக் காணலாம். இங்கேயும் கோவில் வடக்கு பார்த்தே உள்ளது. மாருதி மேற்கு பார்த்து தம்முடைய தலைவனைக் கண்ணாரக் கண்டு யோக நிலையில் உள்ளார். இவர் இங்கு மிகவும் பிரபலம். காரணம், இவர் பெரிய பிணி தீர்க்கும் மருத்துவர்.

பெண்களின் தீராத உடல் நோய் மற்றும் மனநோயையும் தீர்த்து வைக்கிறார். பேய், பிசாசு பிடித்துள்ள பெண்களை இங்கு கூட்டி வந்து அனுமந்த தீர்த்தத்தில் மூழ்கி எழச் செய்து அனுமார் சந்நிதியில் கொண்டு போய் நிறுத்தி விட்டால் சற்று நேரத்தில் அவர்கள் அயர்ந்து தூங்கி விடுகிறார்கள்.

தூங்கி எழுந்ததும் பெண்கள் நோய் நீங்கி சுகமாக நிம்மதியாக மாறி விடுகிறார்கள். கார்த்திகை மாதம் மட்டும் நரசிம்மர் தனது கண்களைத் திறந்து தேவர்களுக்கு அருள் காட்டுவதால், அந்த மாதம் முழுவதும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

போக்குவரத்து வசதி:

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணிக்கு மேற்கே 32 கி.மீ. அரக்கோணத்திலிருந்து 27 கி.மீ. வேலூரிலிருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெரிய ஊர் சோளிங்கர். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இந்த கோயிலுக்கு செல்ல பஸ்வசதி உள்ளது. சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum