சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்
Page 1 of 1
சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்
திருச்சி குளித்தலை கரூர் ரயில் பாதையில் லாலாபேட்டை, மகாதானபுரம் என்ற இரண்டு இடங்கள் உள்ளன. அவைகளின் அருகே காவிரிக்குத் தென் கரையில் சிந்தலவாடி உள்ளது. இங்கு யோக நரசிம்மர் காட்சியளிக்கிறார். இந்தத் தலத்தில் இவர் எழுந்தருளியது ஒரு சுவையான சம்பவம்.
சிந்தல வாடியில்,வியாச ராஜ தீர்த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காளிங்க நர்த்தன கிருஷ் ணர்,மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. இந்த வியாசராஜர் மிகச் சிறந்த மகான். பரமபுருஷர். இவர் அமைத்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் எல்லா நாடுகளிலும் இருந்து வருவார்கள். பல நாட்கள் இத்தலத்திலேயே தங்குவார்கள்.
அப்படித்தங்கியவர்களில் ஒருவர் தான் ஸ்ரீ முஷ்ணம் ஆர்யாச்சார். அவர் ஆதிவராகர் மீதும் ஸ்ரீ நரசிம்மர் மேலும் ஆதீதமான பக்தியுடையவர். சிந்தலவாடியில் அவர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு, கனவில் லட்சுமி நரசிம்மர் தோன்றினார்.
தான் சிந்தலவாடியிலிருந்து சிறிது தொலைவிலே உள்ள கருப்பத்தூரில் சலவைத் தொழிலாளியின் உபயோகத்தில் துணி துவைக்கும் கல்லாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அங்கிருந்து தன்னை மேற்கு திசையில் எவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் கூறி மறைந்தார்.
சிந்தலவாடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கருப்பத்தூருக்கு ஆர்யாச்சார் சென்றார். கனவில் பகவான் சொன்ன இடத்தில் சலவைத் தொழிலாளியால் பயன்படுத்தப்பட்ட கல்லைக்கண்டார்.அழகான யோக நரசிம்மரின் வடிவம் கல்லுக்கு அடிப்புறம் தெரிந்தது.
சலவைத்தொழிலாளி நடுங்கிப் போய்விட்டான். ஆர்யாச்சார் அந்த பவித்ரமான கல்லை எடுத்துக் கொண்டு மேற்கு நோக்கி நடந்தார். சிந்தலவாடி கோயில் அருகே வந்தவுடன் யோக நரசிம்மர் மேலே நடக்க அனுமதிக்கவில்லை. சிந்தலவாடியிலேயே தங்கி விட்டார். இங்குள்ள யோக நரசிம்மர் பக்தர்களின் குறைகள் அனைத்தும் போக்கி அருள் பாலிக்கிறார்.
போக்குவரத்து வசதி :
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதியும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் வசதியும் உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மறைமலைநகர் நரசிம்மர் கோவில்
» நங்கநல்லூர் நரசிம்மர் கோவில்
» சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்
» நரசிம்மர் ஆலயம்
» நவ நரசிம்மர் தலங்கள்
» நங்கநல்லூர் நரசிம்மர் கோவில்
» சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்
» நரசிம்மர் ஆலயம்
» நவ நரசிம்மர் தலங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum