நரசிங்கம் பேட்டை நரசிம்மர்
Page 1 of 1
நரசிங்கம் பேட்டை நரசிம்மர்
காவிரிக்கு தென் கரையில் யோக நரசிம்மராக அமர்ந்து அருள்பாலிக்கும் தலம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இக்கோவில், விஜயநகர பேரரசால் சீரமைக்கப்பட்ட தலம். விஸ்தாரமான கருவறையில் நரசிம்மப் பெருமாள் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
சங்கு சக்கரம் இரண்டு கைகளில் உள்ளன. மற்ற இரு கைகள் யோக முத்திரையைக் காட்டுகின்றன. பெருமான் சாந்த சொரூபியாக அடியார்களின் துயர் தீர்க்கும் காருண்ய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.இரண்ய வதத்துக்குப் பிறகு நரசிம்மரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
அதைப் போக்க இத்தலத்தில் உள்ள சுயம்புநாத சுவாமி உதவினார். நரசிம்மர் தவம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீக்கிக் கொண்டதால் இது சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.
சிறப்புகள்:
நாழிகைப் போதில் நலமருளும் நரசிம்மர் சந்நிதியில் மட்டை தேங்காய்களை சமர்ப்பித்து வேண்டிக் கொள்ளும் பழக்கம் உள்ளது. திருமணமாகாதவர்கள் இம்மாதிரி வேண்டிப் பயன் பெறுவர். இதே நரசிம்மர் முன்னால் ஐந்து வாரங்கள், ஐந்து நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்று நம்பப்படுகிறது.
பக்தர்கள் குடும்பம் மகிழ்ச்சியுடனிருக்க பானக நைவேத்தியம் செய்து விநியோகிக்கிறார்கள். இவரை வேண்டிக் கொண்டால் மறைமுக எதிர்ப்புகளான ஏவல், சூன்யம் ஆகியவைகளிலிருந்து விடுபடலாம்.
போக்குவரத்து வசதி:
இக்கோவில் குடந்தை மயிலாடுதுறை சாலையில் திருவிடை மருதூருக்கு அருகில் உள்ளது. நரசிங்கம்பேட்டை, திருவாலங்காட்டுக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நரசிங்கம் பேட்டை நரசிம்மர்
» சிங்ககிரி நரசிம்மர் கோயில்
» கோனியம்மன், பேட்டை ஈஸ்வரன் கோவிலில் சப்த கன்னிகள்
» நரசிம்மர் ஆலயம்
» நவ நரசிம்மர் தலங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum