திருக்கடிகை (சோளிங்கர்)
Page 1 of 1
திருக்கடிகை (சோளிங்கர்)
அரக்கோணத்திலிருந்து மேற்கே 27 கி.மீ. தொலைவில் உள்ளது சோளிங்கர் இதற்கு திருக்கடிகை, கடிகாசம், சோளிங்கபுரம் என்று வேறு பெயர்களும் உண்டு. பழைய பெயர் `கொண்ட பாளையம்' 750 அடி உயரமுள்ள மலை. 1305 படிகள், ஏழு மண்டபங்கள் கடந்த மலையை அடையலாம் வடக்கு நோக்கிய நிலையில் 5 நிலை இராஜகோபுரம் இரண்டு பிராகாரங்கள் மூலவர் ஹேமகோடி விமானத்தின் கீழ் இருக்கும் யோகநரசிம்மர், சிம்மமுகம், உற்சவர் பக்தவத்சலப் பெருமாள்.
தாயார் அமிர்தவல்லி, உற்சவத் தாயார் சுதாவல்லி, தீர்த்தம் மலையடி வாரத்திலுள்ள பிரம்ம தீர்த்தம். தவ முனிவர்களான அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர் என்னும் சப்தரிஷிகளும் இத்தலத்தில் தவமிருந்து பெருமாளின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆசைப்பட்டனர்.
அதேசமயம் அனுமனும், ஸ்ரீராம அவதாரம் முடிந்து ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு செல்லும் பொழுது தானும் உடன்வருவதாக கூறியதால் அவரும் இந்த தலத்தில் வந்து காத்திருந்தார். இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த சப்த ரிஷிகளுக்கு காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதைக்கண்டு அனுமன் ஸ்ரீராமனிடம் பிரார்த்தனை செய்தார்.
ஸ்ரீராமபிரான் தன்னுடைய சங்கு சக்ரத்தை அனுமனிடம் கொடுத்து இதைக் கொண்டு அரக்கர்களை அழிக்க உத்திரவிட்டார். அனுமனும் அப்படியே செய்தார். காலன், கேயன் என்ற அரக்கர்கள் மாண்டனர். பெருமாள் நரசிங்கமூர்த்தியாகத் தோன்றி முனிவர்களுக்குக் காட்சி தந்தருளினார். விசுவாமித்திரர் நரசிங்கப் பெருமாளைக் குறித்துத்தவம் செய்து ஒரு நாழிகை (கடிகை)யில் பிரம்ம ரிஷி என்னும் பட்டத்தை பெற்றார்.
இத்தலத்தில் ஒரு கடிகை (நாழிகை) தங்கியிருந்தாலும் முத்தி நலம் உண்டாகும் என்பதால் திருக்கடிகை எனப்பட்டது. சோழ சிம்மபுரம் என்பது மருவிச் சோளிங்கர்புரம் என ஆயிற்று. இது பேய் பிசாசு, பல்லி சூனியம் முதலிய சேட்டைகளைத் தீர்க்கும் திருத்தலமாக விளங்குகிறது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» திருக்கடிகை (சோளிங்கர்)
» சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்
» எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய சோளிங்கர் ரசிகர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum