வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா
Page 1 of 1

திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை அதாவது ஏப்ரல் 28-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
பட்சி தீர்த்தம் என்று அழைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் வாரத்தில் துவங்கி நடைபெற உள்ளது.
திருவிழாவின் 3-வது நாள் அன்று 63 நாயன்மார்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக வருவார்கள். அன்று அதிகாலை பக்தர்கள் புகழ்பெற்ற சங்கு தீர்த்த குளத்தில் நீராடி கிரிவலம் வருவார்கள்.
முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாளன்று தேரோட்டம் நடக்கிறது. 5 தேர்களில் விநாயகர், வேதகிரீஸ்வரர், திருபுரசுந்தரி, முருகர், சண்டிகேசுவர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு தேர்களில் மாட வீதிகளில் வலம் வருவார்கள். நிறைவு நாளன்று அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் உற்சவம் நடைபெறும்.
மேலும் திருவிழாவின் போது நாள் தோறும் சுவாமி வீதி உலா, கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
திருக்கழுக்குன்றத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 14-ந்தேதி கொடி ஏற்றம்
» சித்திரை திருவிழா நிறைவு : கள்ளழகருக்கு வழியனுப்பு விழா
» திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்
» மேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா; 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum