திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்
Page 1 of 1

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது.
அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு தங்க கலசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதன்பின் பஞ்சமூர்த்திகளை 61 அடி உயர தங்க கொடிமரம் முன் கொண்டு வைத்து பூஜை செய்தனர்.
காலை 6.30 மணிக்கு தங்க கொடி மரத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றப்பட்டது. பெரிய பட்டம், வெங்கட்ராஜன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழுங்க கொடியேற்றும் விழா நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் எழுப்பினார்கள். விழாவையொட்டி கோவிலின் உட்புறத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்தையொட்டி இன்று முதல் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
தினமும் காலை, மாலை வேளைகளில் மாடவீதிகளில் சாமி உலா நடைபெறும். 5-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. 8-ந்தேதி காலை 9 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
கொடியேற்ற விழாவையொட்டி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் அரங்கநாதன், சுரேஷ் குமார், நகராட்சி தலைவர் பாலச்சந்தர், கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, முன்னாள் நகரமன்ற தலைவர் பவுன்குமார், கராத்தே பாண்டு, கோவில் இணை ஆணையர் அழகர்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி, முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
» திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
» திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
» சபரிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்
» மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum