மேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா; 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை
Page 1 of 1

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 40-ம் ஆண்டு ஆடிப்பூரம் பெருவிழா வருகிற 1, 2-ந் தேதியில் கொண்டாடப்பட உள்ளது. விழாவிற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 4 மணிக்கு கருவறையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடை பெறுகின்றன.
9 மணிக்கு சித்தர் பீடம் வரும் ஆன்மீக குரு பங்காரு அடிகளாருக்கு பாத பூஜையுடன் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. மாலை 6.10 மணிக்கு கருவறையின் முன்பாக நடைபெறும் கலசவிளக்கு வேள்வி பூஜையை மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார்.
மறுநாள் (1-ந் தேதி) காலை 5 மணி முதல் பக்தர்கள் அம்மனுக்கு தீச்சட்டி எடுக்கின்றனர். 7 மணிக்கு கஞ்சி வரவேற்பும் தொடர்ந்து கஞ்சி வார்த்தல் விழாவும் தொடங்குகிறது. கஞ்சி வார்த்தலை கோ.காளிதாஸ் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அன்னதானத்தை டாக்டர் ரமேஷ் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைக்கின்றனர்.
பிற்பகல் 12.30 மணிக்கு கருவறையில் சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேகத்தை கோ.ப.செந்தில்குமார் தொடங்கி வைக்கிறார். அன்னதானத்தை கோ.ப.அன்பழகன் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பக்தர்கள் தங்கள் கைகளாலேயே செய்யும் பாலாபிஷேகம். அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை
(2-ந் தேதி) மாலை வரை தொடர்கிறது.
காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலை சேலம் தொழில் அதிபர் ஜெய்கணேஷ் தொடங்கி வைக்கிறார். ஆடிப்பூர விழாவில் பக்தர்கள் பங்கேற்க வசதியாக காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் ஆகஸ்டு 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
விழாவை முன்னிட்டு மலைக்கோட்டை, வைகை, பொதிகை மற்றும் பாண்டியன் விரைவு ரெயில்கள் ஆகஸ்டு 1 மற்றும் 2-ந் தேதிகளில் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தென்னக ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் மற்றும் ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ, பண்பாட்டு அறநிலையின் பல்வேறு குழுவினரும் செய்து வருகின்றனர்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» உள்ளூர் திருவிழா
» 27ம் தேதி கார்த்திகை தீப திருவிழா : திருவண்ணாமலைக்கு 850 சிறப்பு பஸ்கள் இயக்கம்
» வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா
» திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்
» ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 28-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum