தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு

Go down

அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு Empty அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு

Post  meenu Thu Mar 28, 2013 2:07 pm


மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக அங்கு அலங்கார மேடை அமைக்கப்பட்டு இருந்தது. காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்கள் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு மண்டபத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய பிராட்டிமார்களை ஒரே நேரத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் திருமணம் செய்து கொண்டார்.

திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு திருமாங்கல்யம் மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
»  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 14-ந்தேதி கொடி ஏற்றம்
»  சபரிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்
» சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum