சித்திரை திருவிழா நிறைவு : கள்ளழகருக்கு வழியனுப்பு விழா
Page 1 of 1

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதுரை வைகை ஆற்றில் இறங்கிய அழகர், மண்டூக முனிவருக்கு விமோசனம் அளித்தார். பின்பு தசாவதாரம் நிகழ்த்தினார், பூப்பல்லக்கில் கள்ளழகராக தோன்றினார். கடந்த 23ம் தேதி கள்ளழகர் மதுரை புறப்பட் டார். 24ம் தேதி தல்லாகுளம் பெருமாள் கோயிலில் அழகராக வேடம் பூண்டார். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தங்க குதிரையில் 25ம் தேதி வைகையில் இறங்கினார். பின்னர், அழகர் கருட வாகனத்தில் தோன்றி மண்டூக (தவளை) உருவில் தவம் இருந்த சுதபஸ் என்ற முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
பின்னர் அழகரின் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கள்ளழகரை அப்பன் திருப்பதி வரை சென்று பக்தர்கள் வழியனுப்பினர். இன்று காலை 10.30 மணிக்கு மலைக்கு வருகிறார். மலையில் இருந்து புறப்பட்ட அழகர், மதுரை வண்டியூர் வந்து மீண்டும் மலைக்கு செல்லும் வழியில் 410 திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 7 நாட்களுக்கு பிறகு கள்ளழகர் மலைக்கு வந்து சேருதல் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா
» சித்திரை சிறப்புகள்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 14-ந்தேதி கொடி ஏற்றம்
» பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: மறுபூஜையுடன் நிறைவு
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங

Permissions in this forum:
You cannot reply to topics in this forum