பாசிப்பருப்பு கடைசல்
Page 1 of 1
பாசிப்பருப்பு கடைசல்
வாரத்திற்கு ஒரு முறை உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு வலிமையோடு ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் பருப்பு வகையில் ஒன்றான பாசிப்பருப்பை வைத்து ஒரு சூப்பரான சுவையில் ஒரு ரெசிபியை செய்து சாப்பிடலாம். இப்போது அந்த பாசிப்பருப்பு ரெசிபியில் ஒன்றான பாசிப்பருப்பு கடைசலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் பச்சை மிளகாயை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகாயை போட்டு வதக்கவும்.
அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் கழுவி வைத்துள்ள பாசிப்பருப்பை போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு பாத்திரத்தில் அதனை ஊற்ற வேண்டும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அந்த பருப்பு பாத்திரத்தை வைத்து, ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு குக்கரில் உள்ள பாத்திரத்தை எடுத்து, பருப்பை லேசாக மசிக்க வேண்டும்.
பின்னர் அதன் மேல் சீரகப் பொடி மற்றும் கொத்தமல்லியைத் தூவி, கிளறி விட வேண்டும்.
இப்போது சுவையான பாசிப்பருப்பு கடைசல் ரெடி!!! இதனை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெந்தயகீரை கடைசல்
» கத்திரிக்காய் கடைசல்
» மணத்தக்காளி கீரை கடைசல்
» பெங்களூர் தக்காளி கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» கத்திரிக்காய் கடைசல்
» மணத்தக்காளி கீரை கடைசல்
» பெங்களூர் தக்காளி கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum