கத்திரிக்காய் கடைசல்
Page 1 of 1
கத்திரிக்காய் கடைசல்
பொதுவாக தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றிற்கு சட்னி, குருமா, சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக கத்திரிக்காயை வைத்து ஒரு சட்னி போன்று கடைந்து அத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இந்த ரெசிபியை கத்திரிக்காய் ரெசிபிக்கு கத்திரிக்காய் கடைசல் என்று பெயர். சரி, அந்த கத்திரிக்காய் கடைசலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 4
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, சீரகத்தூள், வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு வேக வைத்த கத்திரிக்காய் கலவையை ஒரு மண் பாத்திரம் அல்லது ஏதேனும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, அந்த கத்திரிக்காய் கலவையில் ஊற்றி, தேவையான அளவு உப்பை போட வேண்டும்.
பின் மத்தை வைத்து அதனை கடைந்து கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான கத்திரிக்காய் கடைசல் ரெடி!!! இதனை இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெந்தயகீரை கடைசல்
» பாசிப்பருப்பு கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» பெங்களூர் தக்காளி கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» பாசிப்பருப்பு கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
» பெங்களூர் தக்காளி கடைசல்
» பசலைக் கீரை கடைசல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum