என்னுடைய வயது 84. இறைவன் அருளால் அன்பான மனைவி, நல்ல பிள்ளைகள், மருமகள்கள், மாப்பிள்ளை என்று எல்லாமும் அமைந்தன. நான்கு வருடங்களுக்கு முன்பு என்னை முந்திக் கொண்டு என் மனைவி இறைவனடி சேர்ந்து விட்டாள். எங்கள் இருவரிடமும் இருந்தவை அனைத்தையும் - நகைகள் உட்பட -
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

சிவபெருமான் படத்தை வைத்துக் கொண்டு அதை உற்று நோக்குங்கள். அவருக்கு விஷப் பாம்புகளால் அச்சம் ஏதும் இல்லை; அமிர்தம் இருந்தும் அந்த இன்பத்தால் துள்ளல் இல்லை
மண்டை ஓடு மாலையை அணிந்து கொண்டிருந்தாலும் சிறிது கூட அருவருப்பு இல்லை; கங்கையை தரித்தாலும் கர்வமில்லை; சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுதும் பூசினாலும் தன்னை கீழானவனாக நினைக்கவில்லை.
இப்படி ஈஸ்வரன் வயதான வாழ்க்கைக்கு மனதை பழக்கும் வழிகாட்டியாக உள்ளார். இந்த கோணத்தில் சிவனை பாருங்கள் என்பதற்காகத்தான் சொன்னேன்.
மிரளுகின்ற குதிரைக்கு இரண்டு பக்கம் கடிவாளம் என்பார்கள். அதுபோல முதுமை வாழ்க்கைக்கு விவேகம், வைராக்கியம் என இரண்டு கடிவாளங்கள் தேவைப்படுகின்றன.
பிள்ளைபூச்சி என்று இரண்டு இஞ்ச் நீளமுள்ள பூச்சியானது கடுமையான சேற்றில் வாழும். வெளியில் வரும்போது அந்த சேறு ஒட்டாமல் உடம்பை வைத்துக்கொண்டு விடும்.
உங்களின் கேள்வியில் கலியுகத்தின் நிலைமை புரிகிறது. வயதான காலத்தில் ஒரு ஆதரவை மனது எதிர்பார்க்கும். அதை தவிர்க்க முடியாது. சில சமயம் உறவுகளின் மீது பாசம் மேல்நோக்கி வருவதில்லை. தன்னுடைய மனைவி, மகன், மகள் என கீழ்நோக்கியும் செல்லும்.
இந்த எண்ணமே ‘ஐயோ, நாம் எவ்வளவு பாசமாக இருக்கிறோம்; இவர்கள் இப்படிச் செய்கிறார்களே’ என்று வேதனையைக் கொடுக்கும்.
வயிற்றில் ஏதேனும் பிரச்னை என்றால் வைத்தியரை பார்க்கலாம். வாழ்க்கையில் பிரச்னை என்றால் வக்கீல்.
ஆனால், மனதிலே நிம்மதியின்மை பிரச்னை எனில் நாதா.. என்று ஆண்டவனைத்தான் நாடவேண்டும். உங்களின் இந்த 84 வயதில் வெள்ளரிப்
பழம் போல நீங்கள் இருக்க வேண்டும்.
முதிர்ந்த வெள்ளரி காம்பை விட்டுவிட்டு அதே இடத்தில் இருப்பதுபோல, எதிலேயும் ஒட்டாமல் அவனை நினையுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிவாலயத்தில் தட்சிணாமூர்த்தி சந்நதி முன் அமர்ந்து இந்த துதியை படிக்கவும்.
கோயில் பூஜை செய்பவரிடம் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்த புனித நீரை கேட்டு வாங்கிப்போய் 2-வது ஸ்லோகமும் படித்து புனித நீரை அருந்துங்கள். அனைவரும் நெருங்கி வருவார்கள். சந்தோஷமாக வாழ்வீர்கள்.
ஸ்லோகம் - 1
சிந்தனை உனக்குத் தந்தேன்
திருவடி எனக்குத் தந்தாய்
வந்தனை உனக்குத் தந்தேன்
மலரடி எனக்குத் தந்தாய்
பைந்துணர் உனக்குத் தந்தேன்
பரகதி எனக்குத் தந்தாய்
கந்தனைப் பயந்த நாதா!!
கருவையில் இருக்கும் தேவே!!
ஸ்லோகம் - 2
அவித்யா மூல நாசாய ஜன்ம கர்ம நிவ்ருத்தயே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் குருபரதோதகம் சிவம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?
» தற்போது மனைவி, குழந்தைகளுடன் நன்றாக இருக்கிறேன். ஆனால், பல வருடங்களுக்கு முன்பு பல தீய பழக்கங்களும் இருந்தபோது திருப்பதி செல்வதற்காக ...
» திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று
» எட்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டு மாடியில் தென்னங்கீற்று கொட்டகை தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அதற்கு பின்னர், சுத்தம் செய்யும்போது கறுப்பு நூலால் கட்டப்பட்ட பொம்மைகளை பார்த்தோம். யாரோ சூன்யம் வைத்திருப்பதாக அஞ்சுகிறோம். என்ன செய்வது?
» என் வயது 46. பிளஸ் 2 வரைதான் படித்திருக்கிறேன். நிரந்தரமாக எங்கும் பணிசெய்ய முடியவில்லை. உடன்பிறந்தவர்கள் இருக்கிறார்கள். அம்மாவின் ஓய்வூதியத்தில்தான் நான், என் மனைவி, பிள்ளைகள் சாப்பிட்டு வந்தோம். தாயாரும் தற்போது காலமாகிவிட்டார். என் எதிர்காலம் குறித்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum