எட்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டு மாடியில் தென்னங்கீற்று கொட்டகை தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அதற்கு பின்னர், சுத்தம் செய்யும்போது கறுப்பு நூலால் கட்டப்பட்ட பொம்மைகளை பார்த்தோம். யாரோ சூன்யம் வைத்திருப்பதாக அஞ்சுகிறோம். என்ன செய்வது?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

வீட்டிற்குள் சில காரியங்களைச் செய்யக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது: தலைமுடி உதிர்த்தல், நகம் வெட்டிப் போடுதல் அல்லது கடித்துத் துப்புதல், தலைமுடியிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட வருவது, வீட்டை பெருக்கியபின் துடைப்பத்தின் புழுதிகளை அப்படியே விட்டு வைப்பது.
இதெல்லாம் கெட்ட சக்திகளை எளிதாக வீட்டினுள் வரச் செய்யும். குங்குமத்துக்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது. மங்கல நாட்களில் கருப்பு ஆடை அணிவது, வீட்டில் காலையில் விளக்கேற்றாமல் அலுவலகங்களுக்கும், வெளியிலும் செல்வது.
மாலையில் விளக்கேற்றாமல் இருப்பது போன்ற விஷயங்களை சரி செய்துகொள்ள வேண்டும்.
பகளாமுகி என்ற சக்தி வடிவத்துக்கு தீய
சக்திகளை ஒடுக்கும் ஆற்றல் உள்ளதால், ‘ஸ்தம்பினீ’ என்ற பெயரும் இவளுக்கு உண்டு. கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினசரி 28 தடவை சொல்லுங்கள். தூய மனதோடு, இறைவன் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு தடையை களையும் திறன் தானாகவே கிடைத்துவிடும்.
க்ஷுத்ராரி ரோக பயதுக்க பிசாசம்ருத்யு
பூதாபவாத நரகார்ணவ பாத கேப்ய:
த்ராணாய மே பவ பயாதபி விச்வமாத:
ப்ரத்யங்கிரே ஸபதி தேஹி கராவலம்பம்!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என்னுடைய வயது 84. இறைவன் அருளால் அன்பான மனைவி, நல்ல பிள்ளைகள், மருமகள்கள், மாப்பிள்ளை என்று எல்லாமும் அமைந்தன. நான்கு வருடங்களுக்கு முன்பு என்னை முந்திக் கொண்டு என் மனைவி இறைவனடி சேர்ந்து விட்டாள். எங்கள் இருவரிடமும் இருந்தவை அனைத்தையும் - நகைகள் உட்பட -
» எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பதக்கம் பறிப்பு
» எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?
» தற்போது மனைவி, குழந்தைகளுடன் நன்றாக இருக்கிறேன். ஆனால், பல வருடங்களுக்கு முன்பு பல தீய பழக்கங்களும் இருந்தபோது திருப்பதி செல்வதற்காக ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum