எனது மகனுக்கு ஒன்பது வயதாகிறது. சற்று மனவளர்ச்சி குன்றி காணப்படுகிறான். 90 சதவீதம் சாதாரணமாக இருந்தாலும், முழுத் தெளிவும் மனவளர்ச்சியும் இல்லை. அவன் பூரண நலம் பெற என்ன செய்ய வேண்டும்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
எனது மகனுக்கு ஒன்பது வயதாகிறது. சற்று மனவளர்ச்சி குன்றி காணப்படுகிறான். 90 சதவீதம் சாதாரணமாக இருந்தாலும், முழுத் தெளிவும் மனவளர்ச்சியும் இல்லை. அவன் பூரண நலம் பெற என்ன செய்ய வேண்டும்?
பொதுவாகவே இம்மாதிரி விஷயங்களுக்கெல்லாம் சாஸ்திரங்களும் வேதங்களும் வேறொரு காரணம் சொல்கின்றன. உங்களுக்கு பசி இருப்பது போல, இறந்துபோன முன்னோர்களுக்கும் பசி இருக்கும்.
அதன் காரணமாகத்தான் அமாவாசை தர்ப்பணம், காசி, ராமேஸ்வரம் போன்ற தலங்களில் நீத்தார் கடன்களை நிறைவேற்றுதல், பிதுர்கள் என்றழைக்கப்படும் முன்னோருக்கு திதி கொடுத்தல் என்று வைத்திருக்கிறது.
இதை நிறைவேற்ற மிகுந்த சிரத்தை வேண்டும். ‘நான் அளிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்கிற ஒருமித்த அக்கறை வேண்டும். இப்படி சிரத்தையோடு செய்யப்படுவதால்தான் இதை ‘சிராத்தம்’ என்கிறார்கள்.
இந்த நீத்தார் கடன்களை சில தலைமுறைகளாக, வெகுகாலம் நிறைவேற்றப்படாத வீடுகளில் பிறக்கும் குழந்தைகள் கொஞ்சம் மனவளர்ச்சி குன்றி பிறக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ரிஷிகள்.
இன்னும் எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் இதைக் கொஞ்சம் முக்கிய காரணமாகவே சொல்கிறார்கள். ஜோதிடர்கள் இதையே வேறுவிதமாக, பாலாரிஷ்டம் என்பார்கள்.
வள்ளுவரும், ‘தென்புலத்தார் தெய்வம்’ என்கிறார். அதாவது மறைந்தவர்களின் அருளை முன்னே பெற்று, பின்னர் தெய்வ அருளை நாடுங்கள் என்கிறார். இதுவே சந்ததிகளை நல்ல முறையில் வாழச் செய்யும்.
தேனிக்கு அருகேயுள்ள ஆசிரமம் எனும் இடத்திலுள்ள ப்ரக்ஞாத தட்சிணாமூர்த்திக்கு பசும்பால் அபிஷேகமும் ஆராதனையும் செய்யுங்கள்.
இப்போது உங்கள் குடும்பத்தில் யார் திதி கொடுக்கும் நிலையில் இருக்கிறாரோ, அவர் மூலமாக அமாவாசை தினங்களில் மூதாதையருக்கு திதி கொடுங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?
» எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» என் வயது 25. எனது கணையத்தில் கல் மற்றும் இன்னும் பல உடல் உபாதைகள். வேலையிலிருந்து நின்று விட்டேன். திருமணத்திற்கான எந்தவித முயற்சியும் இல்லை. பெற்றோரும் மனத் துயரத்தில் உள்ளனர். பூரண நலம் பெற்று, திருமணமாகி வாழ பரிகாரம் கூறுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum