தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் மகனுக்கு வயது 48. திருமண தாமதத்திற்கு பெண் தெய்வ கோபம் காரணம் என கூறுகின்றார்கள். எனக்கும் செய்ய வேண்டியதைச் சொல்லி உதவ வேண்டும்.

Go down

 என் மகனுக்கு வயது 48. திருமண தாமதத்திற்கு பெண் தெய்வ கோபம் காரணம் என கூறுகின்றார்கள். எனக்கும் செய்ய வேண்டியதைச் சொல்லி உதவ வேண்டும்.  Empty என் மகனுக்கு வயது 48. திருமண தாமதத்திற்கு பெண் தெய்வ கோபம் காரணம் என கூறுகின்றார்கள். எனக்கும் செய்ய வேண்டியதைச் சொல்லி உதவ வேண்டும்.

Post  meenu Fri Feb 01, 2013 12:53 pm

உங்களின் கடிதத்தைப் படித்தேன். பெண் தெய்வம் கோபமாக உள்ளது என நீங்களாக நினைத்துக்கொண்டு குழம்பாதீர்கள். உங்கள் மகன் திருமணத்தை நிறுத்த வேண்டுமென்று எந்த பெண் தெய்வமும் எண்ணுவதில்லை.

எதற்கெடுத்தாலும் தெய்வ குற்றம் என்று சொல்லக் கூடாது. பெண் தேவதைகள் உபாசனை, மாந்த்ரீகத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளோர், ஆக்கபூர்வமான பாதையிலிருந்து மாறிச் செல்லும்போது சில இடையூறுகள் ஏற்படும்.

அதுதவிர முந்தைய ஜென்ம பாவங்களாக இருக்கக் கூடுமோ எனவும் கேட்டிருக்கிறீர்கள்.

போன ஜென்மத்து பாவ, புண்ணியங்கள் இந்த ஜென்மத்திலும் உங்களை பாதிக்கின்றன என்றும் ஆனாலும் சர்வேஸ்வரன் அவற்றை மறக்கும் திறனையும் கூடவே அமைத்து விடுகிறான் என்றும் வேத நூல்கள் சொல்கின்றன. இது, இந்த ஜன்மத்தில் நிறைய நல்லது செய்ய வேண்டுமென்பதற்காகத்தான்.

நேற்று என்ன சாப்பிட்டோம் என்பதே நினைவில் இல்லாதபோது, போன ஜென்மம், அதில் செய்த பாவங்கள் பற்றியெல்லாம் நினைவிருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே, கவலைப்படாதீர்கள்.

ஏதேனும் பாவம் செய்துவிட்டதாக மன உறுத்தல் ஏற்படுமானால், இனிமேலாவது தெரிந்து எந்த பாவத்தையும் செய்யாதீர்கள். அதுவே போதும். விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

‘விநாயகர் அகவலை’ தினமும் மூன்று முறை சொல்லுங்கள். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கோவிந்தபுரம் போதேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதிக்கும், அங்கேயே உள்ள பண்டரிநாதர் ஆலயத்திற்கும் சென்று வாருங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» என் வயது 31. மூன்று வருடங்களாக என் திருமணம் தடைபட்டு வருகின்றது. இதற்கு, என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறிய அரச மரம்தான் காரணம் என்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?நாம் வசிக்கும் கட்டடத்துக்கு வெளியே, தோட்டத்தில் அரச மரம் இருப்பது தோஷமாகாது. அது கட்ட
»  Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற
»  என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum