Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற
Page 1 of 1

சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேறு தகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். நன்றாக படித்து, உயர் பதவியில் இருந்து சுதந்திரமாக வாழ பழகிவிட்ட பெண்ணை மருமகளாக தேர்வு செய்கிறார்கள். அவள் நியூயார்க்கிலோ, லண்டனிலோ வேலை பார்த்துக்கொண்டிருப்பாள்.
முற்போக்கு சிந்தனை கொண்டவளாக இருப்பாள். பேஷனாக உடை அணிவாள். இதை எல்லாம் தெரிந்துகொண்டு, பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பெண் பொருத்தமானவள் என்று `ஓகே' செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் ஆன பின்பு அவளது செயல்பாடு ஒவ்வொன்றிலும் குறை கண்டுபிடிப்பதையும், குறை சொல்வதையும் பெரியவர்கள் வழக்கமாக கொள்கிறார்கள்.
அவள் நடை, உடை, பாவனைகளை விமர்சனம் செய்கிறார்கள். தாங்கள் சொல்வது சரி என்றும், அவள் செய்வது தவறென்றும் கருதிக்கொண்டு அவளை திருத்துவதாக நினைத்துக்கொண்டு குடும்பத்திற்குள் போராடத் தொடங்கிவிடுகிறார்கள். தான் நினைப்பதை சரி என்று சொல்ல தனக்கு உரிமை இருக்கும்போது, அவள் செய்வதை சரி என்று சொல்ல அவளுக்கும் உரிமை இருக்கத்தானே செய்கிறது என்று நினைத்துப்பார்க்க மாட்டார்கள்.
அவள் தான் செய்வதை சரி என்று சொல்லிவிட்டால் உடனே அவள் மீது, `குடும்பத்திற்கு லாயக்கற்றவள்' என்ற முத்திரையை குத்துகிறார்கள். அந்த தவறான நம்பிக்கையை தனக்குள்ளே உருவாக்கிக்கொண்டு, அதற்கு தக்கபடி செயல்படத் தொடங்கிவிடுகிறார்கள். அப்போது எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை உணர்வுகளும் அந்த குடும்பத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும்.
அடுத்து அந்த பெரியவர்கள், அந்த பெண்ணைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அதை அப்படியே தங்கள் மகனிடம் வெளிப்படுத்துவார்கள். அதை மகன் உணர்ந்து, தன் மனைவியை தட்டிக்கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதை மகன் செய்யாதபோது, `எதையும் தட்டிக்கேட்க உனக்கு துணிச்சல் இல்லை.
எல்லாவற்றிற்கும் மனைவியை சப்போர்ட் செய்கிறாய்' என்று கூறிக்கொண்டு, இந்த பெரியவர்கள் குடும்பத்திற்குள் கடுமையாக போராடுவார்கள் அல்லது அவர்களிடம் இருந்து விலகிச் சென்றுவிடுகிறார்கள். சில பெரியவர்கள் மருமகளிடம் ஏற்படும் மோதலால், மகனிடம் இருந்து பிரியும் அதே நேரத்தில், தங்கள் பேரக் குழந்தைகளையும் பிரிந்துபோய்விடுகிறார்கள்.
தாத்தா, பாட்டிகளிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும், ஆதரவும், அனுபவங்களும், வழிகாட்டல்களும் அந்த குழந்தைகளுக்கு கிடைக்காமல் போய்விடுகின்றன. தன் விருப்பத்திற்கு ஏற்ப தன் மருமகள் நடக்கவில்லை என்பதற்காக யாரை எல்லாம் பாதிக்கவைக்கிறார்கள் பார்த்தீர்களா?! நன்றாக யோசித்துப் பாருங்கள்.
தங்களை மதிக்கவில்லை என்று கூறிக்கொண்டு பெரியவர்கள் ஒருபுறம் முதியோர் இல்லங்களில் தவிக்கிறார்கள். இன்னொரு புறத்தில் தங்களிடம் அன்பு செலுத்த தாத்தா, பாட்டிகள் இல்லை என்று குழந்தைகள் தவிக்கிறார்கள். இரு தரப்பிலும் பாதிப்புகள் ஏற்பட பெரியவர்கள் ஏன் காரணமாக இருக்கவேண்டும்.
வயதான காலத்தில் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக காலத்தை கழிக்காமல், அவர்கள் ஏன் தண்டனைபோல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். தன்னைவிட வயதில் குறைவானவர்கள் மருமகள்கள். அவர்கள் நிச்சயம் அனுபவத்திலும் குறைவானவர்களாகத்தான் இருப்பார்கள்.
அவர்களை மன்னிக்கும் பக்குவம் பெரியவர்களிடம் எப்போதும் இருக்கவேண்டும். ஒரு பெண்ணை தேர்வு செய்துவிட்ட பின்பு அவளிடம் இருக்கும் நிறை குறைகளோடு அவளை அப்படியே உங்கள் மருமகளாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு பெண்ணின் உடை பிடிக்காமல் போகலாம். பேச்சு பிடிக்காமல் போகலாம்.
அதற்காக அவள் உறவே பிடிக்காமல் போக வேண்டியதில்லையே! நமது குடும்பத்திற்குள்ளே நமக்கு பிடிக்காத செயலை ஒருவர் செய்யும்போது, அதை அவரது இயல்பாக எடுத்துக்கொள்வதற்கு பதில், அவர் தன்னை வெறுப்பேற்றுவதற்காக அவ்வாறு செய்கிறார் என்று நினைப்பவர்களே அதிகம்.
அப்படி நினைப்பதால்தான் குடும்பத்திற்குள் பிரச்சினைகளும், பிரிவுகளும் உருவாகின்றன. பெரியவர்கள் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் எல்லா பெண்களுமே ஆளுக்கு இரண்டு `நியாயத் தராசுகளை' கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று தனது மகளுக்கானது. இன்னொன்று மருமகளுக்கானது.
மகளுக்கானதில் தட்டுகள் எப்படி வேண்டுமானாலும் தடுமாறும். அது தப்பில்லை என்பார்கள். மருமகளுக்கானது மட்டும் தான் எதிர்பார்ப்பதுபோல் துல்லியமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். லைப் ஸ்டைல், நாகரீகம், முற்போக்கு சிந்தனை போன்றவைகள் மகளிடம் இருந்தால் அது பாராட்டுக்குரியதாக இருக்கிறது.
மருமகளிடம் இருந்தால் அது பிரச்சினைக்குரியதாக மாறிவிடுகிறது. ஒரு குடும்பத்தின் பிணைப்பு என்பது, குடும்பத்தினரிடையே இருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கையை பொறுத்தது. அன்பும், நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனப்பான்மை தானாகவே உருவாகிவிடும்.
இந்த பக்குவம் யாருக்கு தேவையோ இல்லையோ, குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு மிக அவசியம். பெரியவர்களிடம் இருந்தால் அவர்களிடம் மன மகிழ்ச்சியிருக்கும். அதை வெளிப்படுத்தும் விதத்தில் பேரன், பேத்திகளுடன் விளையாடுவார்கள்.
அப்போது அவர்களது இளம் வயது அனுபவங்களும், ஆசைகளும் வெளிப்படும். மனதில் உற்சாகம் பொங்கும். அதனால் அவர்களது ஆயுளும், ஆரோக்கியமும் பெருகும். இத்தனை நன்மைகள் இருக்கும்போது, ஏன் மருமகள்களிடம் மோதிக்கொண்டு, பெரியவர்கள் தனிமை எனும் தண்டனையை அனுபவிக்கவேண்டும்?

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» Chennai வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 12:53 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி சருமம் கருத்துப் போச்சா கவலை வேண்டாம் * சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத்
» Chennai சனிக்கிழமை, ஜூலை 28, 3:13 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி சுயமாக சம்பாதியுங்கள்... சுயமரியாதையை பேணுங்கள் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. என்றாலும், இல்லத்தரசிகளும் இர
» Chennai வியாழக்கிழமை, நவம்பர் 22, 1:00 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் தில்லாபுரி அம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழம
» பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 23, 1:07 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி வேண்டியதை தரும் வில்லுடையான் Yaan next schedule in Morocco கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள
» என் மகனுக்கு வயது 48. திருமண தாமதத்திற்கு பெண் தெய்வ கோபம் காரணம் என கூறுகின்றார்கள். எனக்கும் செய்ய வேண்டியதைச் சொல்லி உதவ வேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum