மசாலா மோர்
Page 1 of 1
மசாலா மோர்
குறைந்த செலவில் நிறைந்த சுவையுடன் குளிர்ச்சியைத் தரவல்ல மோர் தயாரிப்பது மிகவும் சுலபம்! அதனுடன் ஸ்பைஸ் மசாலா சேர்த்தால் குளிர்ச்சியுடன், லேசான காரம் சுவையை தூக்கலாக்கி வழங்கும். இது சத்துமிக்கது என்பது இன்னும் சிறப்புக்குரியது.
தனியா, சீரகம், காய்ந்த மாங்காய், மாதுளை விதைகள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த இஞ்சி, கறுப்பு மிளகு, கறுப்பு உப்பு போன்ற பல பொருட்களால் தயாராகும் சாட் மசாலா, மோருக்கு ஒரு ஸ்பைஸ் சுவையைத் தருவதுடன் விரும்பத்தக்க மணத்தையும் அளிக்கும்.
பச்சை நிற இலைகளுக்கே உரித்தான வைட்டமின் `சி' நிறைந்த கொத்த மல்லித் தழை, புதினா இலைகள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் எலுமிச்சம் பழம், வயிறு காக்கும் ஸ்பெஷலிஸ்டான இஞ்சி மற்றும் பெருங்காயம், வைட்டமின் `ஏ' சத்து மிக்க கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து நாம் செய்யப்போகும் `ஸ்பைசி மசாலா மோர்' உடல் ஆரோக்கியத்துக்கும் உகந்தது.
மோரில் நாம் சேர்க்கும் உப்பானது வெயிலில் சென்று வியர்வை மூலமாக நாம் இழக்கும் உப்புச் சத்தை சட்டென ஈடுகட்டி உடல் அயர்ச்சியை போக்க வல்லது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அல்லவா!
கூலான ஸ்பைசி மசாலா மோரை தயாரிக்கலாமா?
தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
தண்ணீர் - 6 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
பொடியாக அரிந்த கறிவேப்பிலை - சிறிதளவு
பொடியாக அரிந்த பச்சைமிளகாய் - 2
அலங்கரிக்க:
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
புதினா இலைகள் - சிறிதளவு
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
கறுப்பு உப்பு (காலாநமக்) - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* தயிருடன் தண்ணீர் ஊற்றி, மத்தால் நன்கு சிலுப்பி எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
* `தாளிக்க' என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைத் தாளித்து, மோரில் போடவும்.
* பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை, ஆய்ந்த புதினா இலைகள், சாட் மசாலா, கறுப்பு உப்பு சேர்த்துக் கலந்து, தேவையானால் பிரிஜ் அல்லது பானையில் வைத்து ஜில்லென்று கொடுக்கவும்.
* கூல் கூல் ஸ்பைசி மசாலா மோர் ரெடி.
சுவைக்கான குறிப்பு:
தேவையானால் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் அரைத்து விழுதாகவும் சேர்க்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மசாலா மோர் மசாலா மோர்
» மசாலா மோர்
» பப்பாளி பழ மோர்
» வெள்ளரிக்காய் மசாலா மோர்
» மோர் கூழ் மோர் கூழ்
» மசாலா மோர்
» பப்பாளி பழ மோர்
» வெள்ளரிக்காய் மசாலா மோர்
» மோர் கூழ் மோர் கூழ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum