கேரட் சூப் கேரட் சூப்
Page 1 of 1
கேரட் சூப் கேரட் சூப்
தேவையானவை:
கேரட் - 4
சின்ன வெங்காயம் - 50 கி
மைசூர் பருப்பு - 3 ஸ்பூன்
பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை -- சிறிதளவு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
வெண்ணெய் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* சின்ன வெங்காயம், கேரட்டை நன்கு கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.
* குக்கரில் வெண்ணெயை உருக்கி அதில் வெங்காயம், கேரட்டை போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் 3 கப் தண்ணீரையும், பருப்புகளையும் அதில் சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்குங்கள்.
* பின்னர் ஆற வைத்து தண்ணீரை வடிகட்டி அரைத்து, பின்னர் அதை வேக வைத்த தண்ணீருடன் கலந்து வடிகட்டி, உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள்.
* 5 நிமிடம் கொதித்ததும் இறக்கி அதில் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறுங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum