கேரட் கறி
Page 1 of 1
கேரட் கறி
தேவையான பொருள்கள்:
கேரட் = அரை கிலோ
பயத்தம் பருப்பு = அரை கிலோ
வற்றல் = 4
வெங்காயம் = 1
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
இஞ்சி = தேவையான அளவு
எண்ணெய்= 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கறிவேப்பிலை = சிறிது
கொத்தமல்லி இலை = சிறிது
செய்முறை:
பயத்தம் பருப்பை களைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
கேரட் மற்றும் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் வற்றலை கிள்ளிப் போட்டு சிறிது நேரம் கிளறவும்.
அடுத்து அதோடு ஊறி இருக்கும் பயத்தம் பருப்பு, நறுக்கிய கேரட்டை சேர்த்து கிளறி அரை கப் நீர் விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி விடவும்.
5 நிமிடம் கழித்துத் திறந்து கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும்
சுவையான கேரட் கறி தயார். இதை எல்லா விதமான ரைஸோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
கேரட்டில் வைட்டமின்கள் A, B, C, D, E, G, K மற்றும் கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் சல்பர் உள்ளது.
இதனால் குறிப்பாக கண்புரை மற்றும் இதர கண் பிரச்சினைகள் குறையும். உடலுக்கு சக்தியளிக்கிறது. இது இரத்த சோகை, இரத்த ஓட்ட பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்களை குறைக்கும். செரிமான பிரச்சினை மற்றும் புண்கள், ஆஸ்துமா போன்றவை குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum